#The judge ordered handcuffs to be put on the inspector; செட்டிங் போட்டு கட்டிங் வாங்கிய இன்ஸ்பெக்டருக்கு காப்பு போட்ட நீதிபதி.

November 6, 2026

By இரா. தேவேந்திரன்.

இந்த வழக்​கில் பால்​துரை தனக்கு முன்​ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி என். ரமேஷ், குற்​றம் சாட்​டப்​பட்ட பால்​துரை மீதான புகாரை விசா​ரித்து, அறிக்கை தாக்​கல் செய்ய விருகம்​பாக்​கம் காவல் ஆய்​வாள​ருக்கு உத்​தர​விட்​டார்.

சென்னை | புகார் அளிக்கச் சென்றவர் கைது: காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை

இந்​நிலை​யில் முன்​ஜாமீன் மனு மீதான விசா​ரணை நீதிபதி என்.ரமேஷ் முன்​பாக மீண்​டும் விசா​ரணைக்கு வந்​த​போது, பால்​துரைக்கு எதிரான புகாரை வாபஸ் பெறும்​படி புகார்​தா​ரரான சூர்​யாவை விருகம்​பாக்​கம் காவல் ஆய்​வாளர் மிரட்​டிய​தாகவும், அதையேற்​காத சூர்யா மீது பால்​துரை மனைவி அளித்த புகாரின் பேரில் வன்​கொடுமை தடுப்​புச்​சட்​டத்​தின் கீழ் பொய் வழக்​குப்​ப​திந்து சூர்​யாவை கைது செய்​த​தாகவும் தெரி​விக்​கப்​பட்​டது.

முதல்வரை விமர்சிக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கு உண்டு - நீதிபதி என் ரமேஷ்  | Madras high court - TN CM Vijay - fnewsnow.com

இந்​நிலை​யில் முன்​ஜாமீன் கோரி பால்​துரை தாக்​கல் செய்​திருந்த மனுவை தள்​ளு​படி செய்த நீதிபதி, நிலமோசடி குறித்து புகார் அளித்த புகார்​தா​ரர் மீதே பொய் வழக்​குப்​ப​திவு செய்த விருகம்​பாக்​கம் காவல் ஆய்​வாளர்​களான முனிசேகர் மற்​றும் ராஜேஷ் ஆகியோர் மீது துறைரீதி​யாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டு​மென மாநகர காவல் ஆணை​யருக்கு உத்​தர​விட்​டு உள்​ளார்.Icon

Share:

இரா. தேவேந்திரன்.

November 6, 2026