#udaya chandran leave a glimmer in the eyes; உதய சந்திரன் IAS. கண்ணத்தில் பளார் விட்டாரா? ஜால்ரா பாபு.

May 16, 2026

By இரா. தேவேந்திரன்.

#TN election2026,  #DMK family story,  #DMK story , #big story, #special story

திமுக குடும்பத்தில் கடந்த 10 நாட்களாக நாம் ஏன் தோற்றோம், எதற்காக தோற்றோம், எப்படி தோற்றோம்,  யார் காரணம்?  என்ன காரணம்?  என்பது குறித்து கேபினட்டின் தலைமை விசாரித்து வந்தது.Modi right choice for chancellor of university of corruption: M K Stalinஅதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. நாம் அது குறித்து ஏற்கனவே திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு  நம்பிக்கை துரோகம் செய்த மூவர் கூட்டணி என்று ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம்.

#Durga was furious; ஸ்டாலினுக்கு நம்பிக்கை துரோகம் செய்த மூவர் அணி. கொந்தளிப்பில் துர்கா.!!!!

இந்த நிலையில்  கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளத்தில் ஒரு பதிவு தீயாய் பரவி வருகிறது.  அந்த பதிவில் கூறி இருக்கும் செய்திகளை நமது வாசகர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் அப்படியே வழங்குகிறோம்.

அந்தப் பதிவில் ஜூனியர் விகடனில் ஒரு செய்தி வெளியானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதோ அந்த பதிவு….

இதோ அந்த பதிவு….

உதயச்சந்திரனை அடித்தாரா சேகர்பாபு…? திமுக தலைவர் கொளத்தூர் தொகுதியில் தோற்றுப் போன சோகம் இன்னும் சித்தரஞ்சன் சாலையை விட்டு கொஞ்சம் கூட அகலவில்லை.Recent changes in DMK are an effort to effect reforms: Stalin - The Hinduஇந்தத் தோல்விக்கு எல்லாம் ஒரே ஒருவர் தான் காரணம் என்று குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டவர் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு. அவரை விசாரணைக்கு அழைத்து திமுக குடும்பம் பரேடு நடத்தியது.

அதில் உச்சகட்டமாக அழுது மன்னிப்பு கேட்டாராம் சேகர்பாபு.  ஆனால் தலைவர் குடும்பம் அவரை மன்னித்து விடவில்லை. பதிலுக்கு எல்லாம் செய்துவிட்டு அழுதாச்சு நாடகமா நடிக்கிறார் என்று சொம்பு எடுத்து அடித்ததாக ஜூனியர் விகடன் கழுகு பகுதியில் வந்திருக்கிறது.சொம்பு அடி வாங்கிய சேகர்பாபு சாஷ்டாங்கமாக கீழே விழுந்து கட்சிப்பதிவியையும் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்து விட்டு நான் ஓடி விடுகிறேன் இதற்கு மேல் என்ன செய்ய சொல்கிறீர்கள் என்று உருக்கமாக பேசிவிட்டு வந்துவிட்டாராம்.

ஆனால் இதற்கெல்லாம் காரணம் உதயச்சந்திரன் ஐஏஎஸ் தான் என்ற கோபம் சேகர்பாவுக்கு உள்ளுக்குள்ளே கொழுந்து விட்டு எறிந்தது.

சொம்பு அடி வாங்கிய சேகர்பாபு நேராக உதயச்சந்திரன் அறைக்கு சென்று அவரை வம்பு சண்டைக்கு இழுத்து அவர் கன்னத்தை சில முறை சேகர்பாபு கை பதம் பார்த்தது என்கிறது கோட்டை வட்டாரம்.த. உதயச்சந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா உதயச்சந்திரன் IAS.

உதயச்சந்திரனை சேகர்பாபு அடித்தாரா..? உள்ளடி வேலை செய்தது யார்? உலக்கை அடி வாங்குவது யார்? தன்னை அடித்த சேகர்பாபுவை சில நாட்களில் கட்சியில் இருந்து நீக்குவதற்கு உதயச்சந்திரன் புதிய வியூகம் வகுத்திருப்பதாக சொல்கிறார்கள்.! உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்கலாமா குடிக்க கூடாதா? என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

உண்மையான காரணம் என்னவென்று அவர்களால் உணர முடிந்தும் கூட தங்களது தவறை திருத்திக் கொண்டு கட்சிப் பணியை சிறப்பாக மாற்றி மக்களிடத்தில் ஒரு நம்பிக்கையை உருவாக்கி மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்று வெளிப்படையாக பேச அவர்களுக்கு மனமில்லை என்கின்றனர் தமிழக அரசியலில் மூத்த தலைவர்கள் சிலர்.சென்னையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் சொத்துக்களில் ஐடி சோதனை.சபரீசன்.

ஒரு பக்கம் சபரீசன் மறுபக்கம் துர்கா இன்னொரு பக்கம் உதயநிதி அவரது ஜால்ராவான மா. கா செந்தில்குமார் சுனில் கனுகுலு போன்றோர் அடித்த கொள்ளை ஆடிய ஆட்டம் இதுவே மக்கள் மத்தியில் திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மக்கள் நலனில் அக்கறை உள்ள எந்த அரசும் பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினால் வாய்ப்பு வருகிற பொழுது பொதுமக்கள் கையில் அரசை தீர்மானிக்கிற நேரம் வருகிற பொழுது ஆளுங்கட்சிக்கு எதிராகத்தான் அவர்கள் வாக்களிப்பார்கள் எதிரான மனநிலையில் தான் இருப்பார்கள் என்பதற்கு திமுக தோல்வி அடைந்ததே காரணம்.என் வீட்டுக்காரர் தான் எல்லாமே! நானும் உங்களோட ஒருத்திங்க... நெகிழ்ந்து பேசிய துர்கா ஸ்டாலின்..! - TamilWireதுர்கா ஸ்டாலின்.

உதாரணத்திற்கு கோயம்பேட்டில் இருந்த பேருந்தை நிலையத்தை கேளம்பாக்கத்திற்கு மாற்றியது அதேபோல மாதவரத்திற்கும் மாற்றி போக்குவரத்து நெரிசலை உருவாக்கி பொதுமக்களின் பயணத்தில் பெரும் கோபத்தை பங்கெடுத்துக் கொண்டது திமுக.

தமிழ்நாடு முழுவது இருக்கும் டாஸ்மாக் மது பார் ஏலத்தில் திமுகவினற்கு ஆதரவாக அதிகாரிகள் நடந்து கொண்டது.

பல வருடங்களாக பொதுமக்கள் குடியிருக்கும் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்குவது போன்ற திட்டத்தில் ஆளுங்கட்சியினர் செய்த ஊழல் ஆளுங்கட்சியினர் சுருட்டிய பணம் பட்டாவிற்கு ஒவ்வொருவரும் கட்சி நிர்வாகிகளும் பணம் கேட்டு மிரட்டியது.  பொதுமக்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்த பகுதிகளை சேகர்பாபு தரப்பு இடித்து தள்ளியது போன்ற சம்பவங்களே தோல்விக்கு மிகப்பெரிய காரணம் இதை இல்லை என்று மறுக்க முடியாது.கோவில்களில் சிறப்பு தரிசனம் ரத்து செய்ய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபுசேகர்பாபு.

அரசியல்வாதிகளின் பெயர் சொல்லி அதிகாரிகள் அடித்த கொள்ளைையையும் சொல்லி மாளாது. தமிழகத்தில் மக்களின் மனநிலையை துல்லியமாக கணித்து முதலமைச்சருக்கு அறிக்கை தர வேண்டிய உளவுத்துறை மருமகனின் பெண் நிறுவனத்திற்கு வழங்கி உண்மையை மறைத்து தங்கள் கட்சி என்னை மீறி யாரும் முடிவெடுக்க கூடாது நான் தான் கட்சியின் முக்கிய ஆதாரம் என சபரீசன் பேச்சை கேட்டுக் கொண்டு உண்மையான தகவல்களை மூடி மறைத்து தவறான தகவலை முதலமைச்சருக்கு அளித்ததின் காரணமாகவே திமுக தோல்வியை சந்தித்தது.Udhayanidhi Stalin sparks clash of generations in DMK?உதயநிதி.

திமுக மாபெரும் மகத்தான வெற்றி பெறும் 140 இடங்களுக்கு மேல் பிடித்து தனித்து ஆட்சி அமைக்கும் என்று இவர்கள் எதிரியை கணிக்க தவறி மதப்புடன் இருந்து தனக்கு ஜால்ரா தட்டும் YOU TUBER களையும் சில ஜால்ரா பேர்வழிகளையும் நம்பி ஆட்சியை இழந்தது அவமானத்தின் உச்சம் என்கின்றனர் தமிழகத்தின் மூத்த அரசியல் விமர்சகர்கள்.

இனிமேலாவது யாரையும் நம்பாமல் தீர விசாரித்து ஆக்கபூர்வமாக கட்சி பணியை மேற்கொண்டு மக்களிடத்தில் நம்பிக்கை உருவாக்கும் விதத்தில் சிறந்த எதிர்க்கட்சியாக விளங்கினால் வரும் 2031இல் பதவியை பிடிக்கலாம்.

இந்த செய்தி குறித்து ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் மற்றும் சேகர் பாபு தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

Share:

இரா. தேவேந்திரன்.

May 16, 2026

Leave a Comment