chennireporters.com

எங்களைப்பற்றி

Abdul

ரிப்போர்ட்டர் டாட் காம் என்ற இந்த தமிழ் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கும் இரா. தேவேந்திரன் தமிழகத்தின் பல முன்னணி தினசரி நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி வார இதழ்களில் பணியாற்றியவர். தமிழகத்திலுள்ள பல மத்திய மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ எம்.பிக்களின் முகத்திரையை கிழித்து அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தவர். இவரின் எழுத்துக்களால் பல அரசியல்வாதிகள் தனது அமைச்சர் பதவிகளை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இணையதளத்தின் அரசியல் பிரிவு செய்தி ஆசிரியர் பாலமுருகன் இருபது ஆண்டுகாலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் செய்தியாளராக பணியாற்றியவர். சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபால் ஜீவ ஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வாசகர்களுக்கு துல்லியமாக செய்தியை தந்தவர். இதனால் பத்திரிக்கையின் உரிமையாளர் மற்றும் ஆசிரியரின் பாராட்டை பெற்றவர். தமிழகத்தின் சிறந்த படைப்பாளி.

இந்த இணையதளத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் சிறந்த அடையாளங்களும் சிறப்பும் அனுபவம் கொண்டவர்கள். இந்த சமூகத்திற்கும் வாசகர்களுக்கும் உண்மையான செய்திகளை இவர்கள் கொண்டு வந்து சேர்ப்பார்கள். பல தமிழ் இணையதள செய்தியை இணையதளங்களுக்கு இடையில் இந்த இணையதளம் தன்னுடைய செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து சமூகப் பொறுப்புடன் செயலாற்றும்..