chennireporters.com

#krishna jewellers ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் பட்டபகலில் துப்பாக்கி முனையில் நகை கடையில் 1.5 கோடி மதிப்புள்ள நகை, பணம்கொள்ளை.

ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் பட்டபகலில் துப்பாக்கி முனையில் நகை கடையில் 1.5 கோடி மதிப்புள்ள பணம்  நகை கொள்ளையடடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை எல்லியம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ். இவர் இதே பகுதியில் கிருஷ்ணா ஜுவல்லரி என்னும் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று 15/4/2024 அன்று வழக்கம் போல நகை கடையை காலையில் திறந்து வைத்துள்ளார். அப்போது மதியம் கடைக்கு வந்த நான்கு மர்ம நபர்கள் பிரகாஷிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அதில் ஒருவர் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு பிரகாஷை மிரட்டி நகைகளை கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

பிரகாஷ் நகைகளை கொடுக்க மறுக்கவே  அவருடன் வந்த இன்னொறு இளைஞர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி கை கால்களை கட்டி போட்டுவிட்டு லாக்கர் அறைக்கு கூட்டி சென்று அவர்கள் எடுத்து வந்த பையில் நகைகள், 5 லட்சம் ரூபாய் பணம், ஐபோன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தயாராக  அவர்கள் எடுத்து வந்த  ஷிப்ட் வெள்ளை நிற காரில் தப்பி சென்றுள்ளனர். பின்னர் இது குறித்து நகை கடை உரிமையாளர் பிரகாஷ் முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு  வந்த காவல்துறையினர் CCTV காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கொள்ளை சம்பவம் அரங்கேறிய நகை கடையில் ஆவடி மாநகர காவல் கூடுதல் ஆணையர் ராஜேந்திரன் துணை ஆணையர் அய்மான் ஜமால் உள்ளிட்ட அதிகாரிகள் நகைக்கடை உரிமையாளரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து கண்டறிய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மேலும் கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனத்தின் எண் கண்டறியப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது வட இந்தியர்கள் என நகை கடை உரிமையாளர் தெரிவித்த நிலையில் அதன் அடிப்படையில் போலீசார் வாகன சோதனைகளை தீவிர படுத்தியுள்ளனர். இது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் ஆணையர் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது விரைவில் கொள்ளையர்களை பிடித்துவிடுவோம் என்று  தெரிவித்தார்.

 

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில் காவல்துறையினருக்கு எதிராக கமெண்ட் அடித்து வருகின்றனர். காவல் நிலையத்தை பொதுமக்கள் இருக்கும் கிராமத்திற்குள்ளோ அல்லது நகரத்திற்குள்ளோ இருக்க வேண்டும் ஆனால் முத்தா புதுப்பேட்டை காவல் நிலையம் ஏரிக்கரை ஓரத்தில் டாஸ்மாக் கடை அருகில் இருக்கிறது.

காலை டாஸ்மாக் கடை திறந்தவுடன் கடை மூடும் இரவு 10 மணி வரை காலையிலிருந்து வேலை பார்க்கும் பீட்டு காவலர்கள் ரோந்து காவலர்கள் கடைக்கு வருபவனையும் பிடித்து காசு வாங்குகிறார்கள். சாராயம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு செல்பவனையும் மடக்கி காசு வாங்குகிறார்கள். குடித்துவிட்டு பைக் ஓட்டுபவரிடமும் காசு வாங்குகிறார்கள் இதற்கே அவர்களுக்கு நேரமில்லை வாங்கிய அம்பது நூறு பணத்தை எண்ணி தன் பாக்கெட்டில் வைப்பதற்கே நேரம் போதவில்லை.  

மேலும் கொள்ளை அடிக்க வந்தவர்கள் பழைய குற்றவாளிகளாக இருந்தாலும் கூட துப்பாக்கியை டேபிள் மீது வைத்து விட்டு நகைகளை கொள்ளையடிக்க வாய்ப்பு இல்லை ஏனென்று சொன்னால் துப்பாக்கி எடுத்து வந்து மிரட்டுபவன் அதை தன் கையில் ஆயுதமாக வைத்திருப்பான் அதை விட்டுவிட்டு டேபிள் மேல் துப்பாக்கியை வைத்துவிட்டு பொறுமையாக நகை எடுத்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. எனவே நகைக்கடை உரிமையாளருக்கும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் விசாரிக்க வேண்டும். மேலும் சம்பவம் நடந்த பிறகு போலீசார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொள்ளையர்கள் எடுத்து வந்த வெள்ளை நிற ஷிப்ட் காரின் நம்பரை சொல்லி விசாரித்து இருந்தால் விரைவில் பிடித்திருக்க முடியும் என்கின்றனர்.

கொள்ளையடிக்க வந்தவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்தி பேசினார்கள் என்று கடை உரிமையாளர் சொல்லுவதை ஏற்கும் படியாக இருந்தாலும் இவருக்கு தெரிந்த முகம் போலத்தான் இருக்கிறது. கொள்ளையர்கள் நகை கடை உரிமையாளரை அடிக்காமலும் முகமூடி அணியாமலும்  நகைகளை எடுத்து சென்றது சந்தேகமாகத்தான் இருக்கிறது.

 

சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளர் வங்கியில் ஏதாவது லோன் வாங்கி இருக்கிறாரா அவருக்கு கடன் சுமை ஏதாவது இருக்கிறதா என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும். மேலும் இன்சூரன்ஸ் பணத்திற்காக தானே கொள்ளையர்களை தயார் செய்து தனது கடையில் நகையைத் திருட திட்டம் தீட்டி கொடுத்தாரா என்று விசாரிக்க வேண்டும் என்கின்றனர் சில உளவுத்துறை அதிகாரிகள்.

இதையும் படிங்க.!