chennireporters.com

#cheating,fraud ; பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த ஃபிராடுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல் புள்ளிகள்.

பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றி மூன்றரை லட்சம் ரூபாய் பணம் வாங்கி ஏமாற்றிய பிரமுகர் மீது வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

வெங்கல அடுத்த மேல் செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் இவரின் நண்பர் மாகரல் கண்டிகையை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் விக்னேஷ் மற்றும் நாசரேத்து பகுதியை சேர்ந்த சதீஷ் மூன்று பேரும் நண்பர்களாக லாரி வைத்து தொழில் செய்து வந்தனர்.

ஒவ்வொருவருக்கும் பொக்லைன், லாரி போன்ற இயந்திரங்கள் தனித்தனியாக வைத்துள்ளனர். ஆனால் சுந்தருக்கு மட்டும் பொக்லைன் இயந்தரம் மட்டுமே இருக்கிறது. அவருக்கு லாரி இல்லை. எனவே விக்னேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சுந்தரை சந்தித்து உன் பெயரில் லாரி வாங்கலாம் தற்போது நெடுஞ்சாலைத் துறைக்கான பணிகளில் எங்களது லாரிகளும் ஒப்பந்த பணியில் ஈடுபட்டுள்ளது நல்ல வருமானம் வருகிறது.

 

நீயும் லாரி வாங்கினால் மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம் என்று ஆசைகாட்டி லாரி வாங்க சம்மதிக்க வைத்தனர். ஆனால் சுந்தரின் மனைவி மேரி லாரி வாங்க சம்மதிக்கவில்லை. காரணம் பொக்லைன் இயந்திரத்தால் நிறைய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் லாரி வாங்க தேவையில்லை என்று மறுத்துள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் மேரியை சந்தித்து நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் நஷ்டத்தில் இருந்து உன்னை மீட்டு தருகிறோம் என்று மூளை சலவை செய்து மேரியிடமிருந்து  9 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிய விக்னேஷ் முன் பணமாக வைத்து லோன் போட்டு ஒரு டாராஸ் லாரியை வாங்கி உள்ளனர்.

சுந்தர் பெயரில் லாரி வாங்குவதாக சொல்லி விட்டு விக்னேஷ் பெயரில் வாங்கிய லாரியை பூஜை போடுவதற்கு கூட சுந்தரையும் அவரது மனைவியையும் கூப்பிடவில்லை.

அதன் பிறகு லாரியை சுந்தரிடம் ஒப்படைக்கவில்லை. காரணம் உங்கள் கணவர் லாரியை பத்திரமாக பார்த்துக் கொள்ள மாட்டார் நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் கவலைப்படாதீர்கள் உங்களுடைய பணத்தை தந்து விடுகிறேன் இல்லை என்றால் லாரியை உங்களிடம் திருப்பி கொடுத்து வருகிறேன் என்று சமாதானம் செய்த விக்னேஷ் ஏறக்குறைய இரண்டு மூன்று மாதங்களாக பணமும் தராமல் லாரியையும் தராமல் இழுத்தடித்து ஏமாற்றி வருகிறார்.

இந்த நிலையில் மாகரல் கண்டியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்  ஆகியோர் விக்னேஷுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அது தவிர ராமாபுரம் பகுதியில் உள்ள விஏஓ சீனு இவர் தற்போது கல்யானகுப்பம் விஏஓ வாக பணியாற்றி வருகிறார்.  இவர் அரசு வேலையை செய்யாமல் ஊரில் உள்ள புறம்போக்கு நிலங்களுக்கு போலி ஆவணம் தயார் செய்து பட்டா போட்டு விற்பனை செய்து வரும் விஏஓ சீனுவின் மச்சான் தான் இந்த  விக்னேஷ் இவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். மகளீர் சுய உதவி குழு மூலமும் பிற வங்கிகள் மூலம்  கடன் வாங்கி லாரி வாங்க பணம் கொடுத்த மேரியை திட்டமிட்டே விக்னேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் சதி திட்டம் தீட்டி ஏமாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்டு பணத்தை ஏமாற்றியுள்ளனர்.

இதுகுறித்து மேரி வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் மேரி தமிழக அரசின் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மகளிர் ஆணையத்துக்கும் புகார் அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட எனக்கு நியாயம் தேடித் தரும்படியும் பணம் கேட்கும் என்னையும் தன் கணவரையும்  கொலை செய்து விடுவேன் என்று மிரட்டும் விக்னேஷ் மற்றும் சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே மேரி மனுவில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க.!