திருவள்ளூர் மாவட்டம் புழல் BDO அலுவலகத்தில் 11 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது இதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போலிசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களும் செய்தியும் வெளியாகி உள்ளது.
அது தவிர கடந்த நான்கு ஆண்டுகளாக லே அவுட்டுக்கு அப்ரூவல் வழங்கியது குறித்த ஆவணங்களையும் மற்றும் வீடு மற்றும் கம்பெனிகள் பில்டிங் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது குறித்தும் ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர் ஏறக்குறைய 50 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாகவும் அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எடுத்துச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் கலெக்டர். டாக்டர் பிரபு சங்கர் ஐஏஎஸ்.
கடந்த நான்கு ஆண்டுகளில் அதாவது புழல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் BDOக்களாக வேலை செய்த அமிர்த மன்னன், சாந்தி, ராமகிருஷ்ணன், வேதநாயகம், சித்ரா இவர்கள் காலத்தில் ஏறக்குறைய 150 பில்டிங் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது 40க்கும் மேற்பட்ட லே அவுட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஒரு பிளாட் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெறப்படுகிறது ஒரு லே அவுட்டில் 50 முதல் 100 பிளாட்டுகள் வரை அப்ரூவல் கேட்டு மனு அளிக்கப்படுகிறது. அந்த மனுக்களுக்கு அதாவது ஒரு பிளாட்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் என்றால் 100 பிளாட்டுக்கு மொத்தம் 2500000 சுமார் 25 லட்சம் ரூபாய் ஆகிறது.இந்த 25 லட்சம் ரூபாயில் அதிகாரிகள் சேர்மன் அனைவரும் சதவீத அடிப்படையில் பிரித்துக் கொள்கின்றனர்.
புழல் ஒன்றிய சேர்மன் தங்கமணி அவரது கணவர் திருமால்
பில்டிங் கட்டுவதற்கு ஒரு சதுர அடிக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக அதிகாரிகள் வாங்குகின்றனர். இதுவரை 150 பில்டிங் கட்டப்பட்டுள்ளது ஒவ்வொரு பில்டிங்கின் அளவு 2000 சதுர அடியில் இருந்து 5 ஆயிரம் ஏழாயிரம் பத்தாயிரம் சதுர அடிகள் வரை உள்ளது. இதில் மட்டும் ஏறக்குறைய 6 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வீடு கட்டுவதற்கு ஒரு பைலுக்கு 14,000 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக வாங்குகின்றனர். அதன் அடிப்படையில் பத்தாயிரம் வீடுகள் கட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். வீடுகள் கட்ட அனுமதி வழங்கியதில் மட்டும் 14 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
இதில் சித்ரா பிடிஓவாக இருந்த பொழுது மட்டும் ஏறக்குறைய 7 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. விளாங்காடு பாக்கம் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதில் மட்டும் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
மணி சேகர் பிடிஒவாக பொறுப்புக்கு வந்த பிறகு பல்வேறு புகார் கடிதங்கள் அவருக்கு வந்தது குறிப்பாக விளங்காடு பாக்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் அதாவது விளாங்காடு பாக்கம், கண்ணம்பாளையம், பள்ளிக்குப்பம், தர்காஸ், கோமதியம்மன் நகர், சக்ரா காடன் ஆகிய பகுதிகளில் அனுமதி பெறாமல் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தனியார் நிறுவனங்கள் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் குடோன்கள் அரிசி ஆலைகள் அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருக்க அந்த தனியார் நிறுவன உரிமையாளர்களிடம் சித்ரா பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார் என்ற தகவலை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு ஆளும் கட்சியைச் சார்ந்த ஒரு விஐபி தனி நபர் ஒருவர் மூலம் புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக புழல் திமுக ஒன்றிய சேர்மன் தங்கமணி அவரது கணவர் திருமால் அனைத்து நிர்வாக விஷயத்தில் தலையிட்டு ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த அலுவலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளே நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிளானிங் பிரிவில் பணியாற்றும் இரண்டு பெண் ஊழியர்களுக்கு அரசு அனுமதி பெறாமலே பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் தான் அப்ரூவல் வழங்கும் விஷயத்தில் பணப்பட்டுவாடா செய்து அதை அதிகாரிகளுக்கும் திமுக சேர்மன் தங்கமணியின் கணவர் திருமாலுக்கு வழங்குவதாக நேற்று நடந்த சோதனையில் வாக்குமூலமாக கொடுக்கப்பட்டதாக சொல்லுகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று 25.4.2024 அன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நள்ளிரவு 12 .20 மணி வரை சோதனை நடைபெற்றது.
BDO சித்ரா
இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதற்கான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். முக்கிய கோப்புகள், ஆவணங்கள், லேப்டாப் , கம்ப்யூட்டர் , ஹார்ட் டிஸ்க் போன்ற முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சம்பத் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் மூன்று பெண் ஊழியர்களின் செல்போன்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விளாங்காடு பாக்கம் கிராமத்தில் New Star City land promoters ஜப்பார் என்பவர் ஏழு ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்திற்கு சிஎம்டிஏ அப்ரூவல் கேட்டு மனு அளித்துள்ளார். மனு பரிசிலினையில் உள்ளது. ஆனால் இதுவரை அனுமதி வழங்ப்படவில்லை. இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் ஜஃபார் என்பவர் தனது நிலத்தை பிளாட்டுகளாக பிரித்து விற்பனை செய்து விட்டார். ஆனால் அனுமதியே பெறாத இடத்திற்கு புழல் பி டி ஓ அலுவலக அதிகாரிகள் குறிப்பாக சித்ரா அவர்கள் அனுமதி அளித்துள்ளார். இதே நிறுவனம் சிறுங்காவூர் என்ற கிராமத்தில் 2 ஏக்கர் நிலத்தில் லேஅவுட் போட்டுள்ளனர். அந்த இடத்திலும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. என்கிற பிரச்சனை ஏற்கனவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புழல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் அவர்களின் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.