இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதிக்கும் நாளை ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் தேர்தலில் பொதுமக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்துள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அதாவது ஆடல் பாடல் உட்பட வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விதமான விளம்பரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
நாளை நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் இது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கிறது என்று ஓட்டு போடாமல் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டாம்.
தங்களுக்குப் பிடித்தமான வேட்பாளரை தங்களுக்கு பிடித்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க நீங்கள் விரும்பும் சின்னத்தில் வாக்களியுங்கள். ஆனால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என்பது ஜனநாயக கடமை அது மட்டுமல்ல அது இந்திய அரசியல் சட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
பொதுமக்களுக்கு எந்த அரசியல் கட்சித் தலைவரையும் பிடிக்கவில்லை என்றாலும் கூட நோட்டாவுக்கு தங்களது வாக்குகளை செலுத்தலாம். ஆனால் வாக்குகளை போடாமல் அதாவது ஓட்டுகளை போடாமல் வீட்டில் இருந்து டிவி பார்ப்பதோ, சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டி நேரத்தை வீணாக்குவதோ கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோள்.
எனவே வாக்களிக்கும் நேரம் காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை ஒவ்வொருவரும் தனது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை பான் கார்டு ஓட்டுனர் உரிமம் பேங்க் பாஸ்புக் போன்ற ஏதாவது ஒரு ஆதாரத்தை கையில் எடுத்துக் கொண்டு வாக்குகளை செலுத்தலாம். எனவே மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்.
அனைவரும் கண்டிப்பாக வாக்களிப்பது ஜனநாயகத்தின் கடமை அது ஒவ்வொரு தனி மனிதனின் உரிமை. எனவே அனைவரும் வாக்களியுங்கள். பொது மக்கள் அனைவரும் ஓட்டு போடுங்க.