ஆவடி அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் அடைந்த சம்பவத்தில் அதாவது கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கொலை செய்யப்பட்ட ரவுடி சாந்தகுமாரின் உறவினர்கள் தரப்பில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மீது பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாமினில் வந்தவரை விசாரணைக்கு அழைத்து வந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரிக்காமல் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் தனி ரூமில் வைத்து பன்றிக்கட்டு விசாரணை நடத்தி சாந்தகுமாரை அடித்தே கொலை செய்தார் இன்ஸ்பெக்டர் குணசேகரன் என்கிற குற்றச்சாட்டை வைக்கின்றனர் ரௌடி சாந்த குமாரின் உறவினர்கள்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் குணசேகரன்.
அது தவிர இன்ஸ்பெக்டர் குணசேகரன் மிக மோசமான சாதி வெறி பிடித்த மிருகம் என்கின்றனர் அவர்கள். காரணம் ஏற்கனவே குணசேகரன் திருநின்றவூரில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது நான்கு கொலைகள் இவர் பனிக்காலத்தில் நடந்திருக்கிறது. குறிப்பாக திருநின்றவூர் அருகே உள்ள கொட்டாம்பேடு கிராமத்தை சேர்ந்த திமுக வழக்கறிஞரும் கொசவன்பாளையம் பஞ்சாயத்து தலைவருமான பரமகுரு என்பவர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அந்த கொலைக்கு முழு முழு காரணம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தான் என்கின்றனர் பரமகுருவின் வழக்கறிஞர் நண்பர்கள் அது தவிர பணத்துக்காக எல்லா வேலைகளையும் செய்யக்கூடிய நபர் தான் இன்ஸ்பெக்டர் குணசேகரன் என்கின்றனர். தேர்தல் சமயத்தில் ஒரு ரவுடியை அழைத்து வந்து விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன?
இன்ஸ்பெக்டர் குணசேகரனின் whatsapp நம்பரில் பேசிய மர்மப் பெண் யார் பலமுறை பல மணி நேரம் அவர் பேசியிருக்கிறார் என்று குற்றச்சாட்டை வைக்கின்றனர். சி டிஆரில் சிக்குவாரா இன்ஸ்பெக்டர் குணசேகரன்? இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு மூன்று செல்போன்கள் இருக்கிறது.
துறை ரீதியாக அதிகாரிகள் தொடர்பு கொள்ள ஒரு நம்பரும் பர்சனலாக இரண்டு செல்போன்களும் வைத்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் குணசேகரன். அவரது 3 செல்போன் நம்பர்களையும் சிடி ஆர் போட்டு யார் யாரிடம் பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தினால் ரவுடி சாந்தகுமார் கொலை செய்ய சொன்னது யார்? அதற்காக இவர் பேசிய வியாபாரம் எவ்வளவு என்ன தொகை பேசப்பட்டது என்கிற விவரம் தெரியவரும் என்கின்றனர்.
மேலும் தனக்கு ஒழுங்காக கப்பம் கட்டாத ரவுடிகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான வியாபாரம் செய்யும் நபர்கள் அனைவர் மீதும் ஒரு ரவுடி மீது இன்னொரு ரவுடி இடம் போட்டுக் கொடுத்து இரண்டு ரவுடிகளை மோதவிட்டு அதில் குளிர்காய்வது தான் குணசேகரனின் தனி ஸ்பெஷாலிட்டி என்கின்றனர். அவரால் பாதிக்கப்பட்ட ரவுடிகளும் அவருடன் பணியாற்றும் சில போலீஸ் அதிகாரிகளும்.
ரவுடி சாந்தகுமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டாரா அல்லது கொலை செய்யப்படுவதற்கு முன் அடித்து துன்புறுத்தப்பட்டு இறப்பதற்கு முன்பு குளிர்பானம் வாங்கி வாயில் ஊற்றி அதனால் மாரடைப்பு ஏற்பட்டது என்று ஏற்கனவே கதை கட்டி வைத்த குணசேகரனின் கற்பனை கதையின் உண்மை நிலவரம் தெரியவரும் என்கின்றனர் சாந்தகுமாரின் வழக்கறிஞர்கள்.
ரவுடி சாந்தகுமார்.
சட்டத்திற்கு புறம்பாக இன்ஸ்பெக்டர் குணசேகரனின் சம்பாதித்த சொத்து மதிப்பு சில கோடிகளைத் தாண்டும் என்கின்றனர் அவருடன் பணியாற்றிய சில போலிஸ்காரர்கள். இன்ஸ்பெக்டர் குணசேகரனின் மனைவி வைத்துள்ள தங்க நகைகள் மட்டும் நூற்றுக்கணக்கான சவரன்களை தாண்டும் என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள்.
மது, மாது போன்ற விஷயங்களில் ஜெகதால கில்லாடி தான் இன்ஸ்பெக்டர் குணசேகரன் அவர் நட்பு வட்டாரத்தில் உள்ள அம்மினிகளுக்கு எல்லா சகல வசதிகளையும் செய்து கொடுக்கும் நல்ல மனம் படைத்தவர் என்கின்றனர் அவருடன் பணியாற்றிய பெண் காவலர்களும் உளவுத்துறை அதிகாரிகளும் .
இன்ஸ்பெக்டர் குணசேகரன்.
இன்ஸ்பெக்டர் குணசேகரனின் குடும்பத்தில் உள்ள அனைவரது செல்போன்களையும் CDR எனப்படும் call detail record எடுத்து விசாரிக்க வேண்டும். அவர்களின் பெயர்களில் உள்ள சொத்துக்கள் எவ்வளவு உள்ளது என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியவரும் என்கின்றனர் சாந்தகுமாரின் உறவினர்கள். சங்கர் கொலை செய்யப்பட்ட விவகாரத்திலே சில வெள்ளை சட்டை வி.ஐ.பிகள் சிலர் குற்றவாளிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டாமல் இருக்க கொஞ்சம் அடக்கி வாசிக்க இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு கட்டிங் கொடுத்ததாக சொல்கிறார்கள் பூந்தமல்லி வழக்கறிஞர்கள் சிலர்.
ஆவடி மாநகர போலீஸ் கமிஷ்னர் சங்கர்.
ஆவடி மாநகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும் அதேபோல் அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் சாந்தகுமாரின் உறவினர்கள்.
ரவுடி சாந்தகுமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, நசரத்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அவரது விளக்கம் கேட்க நாம் அவரை தொடர்பு கொண்டோம். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இன்ஸ்பெக்டர் குணசேகரன் அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.