chennireporters.com

தமிழ் மீது எனக்கு பற்று அதிகம் பிற மொழி கற்பதில் தவறில்லை. ஆளுநர் தமிழிசை பேச்சு.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் திருமண மண்டபம் ஒன்றில் காந்தி பவுண்டேசன் தனியார் தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, மண்ணும் மரபும் என்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு பாரம்பரிய உணவுப் பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிய மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியவை பாராட்டி விருதுகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.  மரபுகளை மீட்டெடுக்கும் சூழலில் உள்ளோம் எனவும் கொரோனா அதை கற்று கொடுத்துள்ளது என்றார். பாரம்பரிய உணவிலும், பாரம்பரிய சிகிச்சை முறையிலும் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றும் இதை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் வேர்களை தேடி மரபுகளை காப்பாற்ற வேண்டும் என்றார்.  மொழியை கொண்டாடுவதில் தமிழர்கள் என்றுமே மிக பெருமை வாய்ந்தவர்கள் எனவும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுவையில் புதிய கல்வி கொள்கை தொடங்கப்படும் எனவும், மற்றொரு மொழியை கற்று கொள்வதில் தவறில்லை என தான் கூறியதற்கு சமூக வலைதளங்களில் எதை எதையோ திணிப்பதாக எழுதுகிறார்கள் எனவும் எல்லாருக்கும் இருப்பதை விட தமக்கு தமிழ் பற்று அதிகம் எனவும், தமிழ் உயிரிலும் மட்டுமல்ல, எனது பெயரிலும் உள்ளது என்றார்.

நல்லதை எடுத்துக்ககொண்டு இளைய சமுதாயத்திற்கு எடுத்து சொல்வோம் என்பது தான் தமது தாழ்மையான கருத்து எனவும் மொழி அவசியம் என்பதை தாண்டி மொழி அரசியலை செய்து கொண்டில்லாமல், தாய் மொழியை வேகமாக கற்று கொள்ள வேண்டும் எனவும் விமர்சனம் செய்யும் பாதி பேருக்கு தமிழில் பெயரில்லை எனவும், தமிழில் பேச முடியாது, பிழை இல்லாமல் எழுத முடியாது எனவும் தாம் எல்லா விதத்திலும் தமிழ் பற்று உள்ளவர் என்றார்.

ஒரு மாவட்டத்தில் ஒரு உற்பத்தி  என்பதை மீட்டெடுக்கும் முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது என்றார். தொழிற்கல்வியை தமிழில் கொண்டு வர பிரதமர் வலியுறுத்தியும், அந்தந்த மாநில அரசு செய்ய மறுக்கிறது எனவும் நீட் தேர்வை தமிழில் எழுத கூறுகிறார்.

தமிழை எல்லோரும் கொண்டாடி வருகின்றனர் என்றார். நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் வேண்டாம் என்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

தெலுங்கானாவில் பல பேருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறதுஎனவும் இந்தியை வேண்டாம் என கூறுபவர்கள், கேந்திரிய வித்யாவில் சீட் வாங்கி தர சொல்கின்றனர் என்றார். பேசுவதற்கும் எதார்த்த உண்மைக்கும் உண்மையில்லை என்றார். ஆனால் நாங்கள் அப்படியில்லை எனவும் உள்ளதை உள்ளபடி பேசுவதாக கூறினார்.

தமிழ் நமக்கு உயிர், புதிய கல்வி கொள்கை கூறுவது இன்னொரு மொழியை கற்றுக்கொள்வது, அது ஆங்கிலமாக இருக்கலாம், மற்ற மொழியாக இருக்கலாம், இதை சொன்ன உடன் பாய்ந்து வருகின்றனர் எனவும் தமிழை சரியாக உச்சரிக்க விவாதத்திற்கு தான் தயார் என்றும் இணையத்தில் தவறாக தாக்குதல் நடத்தாதீர்கள் எனவும் அனைவரும் இணைந்து பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கைகுலுக்குவதை தவிர்த்து தமிழர் பாரம்பரியமான கை கூப்பி வணங்குவதை கொரோனா மீட்டெடுத்து கொடுத்துள்ளது எனவும், தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை மறந்து மேல்நாட்டு உணவு வகைகள்  தற்போதைய தலைமுறையை ஆட்கொண்டுள்ளது என்றார்.

இந்தியாவில் உள்ள உணவுகளில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதை கொரோனா காலத்தில் வெளி நாட்டினர் தெரிந்து கொண்டனர் எனவும் பாரம்பரிய பழமையை மீட்டெடுத்தால் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் எனவும் அலோபதி மருத்துவராக இருந்தாலும் எனக்கு நாட்டு மருத்துவத்தில் பிடிப்பு அதிகம் என பேசினார்.

பேட்டி: திருமதி,தமிழிசைதிருவள்ளூர் : மொழி அரசியல் செய்யும் பாதி பேருக்கு தமிழில் பெயர் கிடையாது, பிற மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை, விமர்சனம் செய்பவர்கள் பாதி பேருக்கு தமிழில்  பேச, எழுத தெரியாது, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் காட்டமாக தெரிவித்துள்ளார்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் திருமண மண்டபம் ஒன்றில் தனியார் தனியார் தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, மண்ணும் மரபும் என்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு பாரம்பரிய உணவுப் பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிய மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியவை பாராட்டி விருதுகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மரபுகளை மீட்டெடுக்கும் சூழலில் உள்ளோம் எனவும் கொரோனா அதை கற்று கொடுத்துள்ளது என்றார்.

பாரம்பரிய உணவிலும், பாரம்பரிய சிகிச்சை முறையிலும் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றும் இதை மீட்டெடுக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் வேர்களை தேடி மரபுகளை காப்பாற்ற வேண்டும் என்றார்.

மொழியை கொண்டாடுவதில் தமிழர்கள் என்றுமே மிக பெருமை வாய்ந்தவர்கள் எனவும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுவையில் புதிய கல்வி கொள்கை தொடங்கப்படும் எனவும், மற்றொரு மொழியை கற்று கொள்வதில் தவறில்லை என தான் கூறியதற்கு சமூக வலைதளங்களில் எதை எதையோ திணிப்பதாக எழுதுகிறார்கள் எனவும் எல்லாருக்கும் இருப்பதை விட தமக்கு தமிழ் பற்று அதிகம் எனவும், தமிழ் உயிரிலும் மட்டுமல்ல, எனது பெயரிலும் உள்ளது என்றார்.

நல்லதை எடுத்துக்ககொண்டு இளைய சமுதாயத்திற்கு எடுத்து சொல்வோம் என்பது தான் தமது தாழ்மையான கருத்து எனவும் மொழி அவசியம் என்பதை தாண்டி மொழி அரசியலை செய்து கொண்டில்லாமல், தாய் மொழியை வேகமாக கற்று கொள்ள வேண்டும் எனவும் விமர்சனம் செய்யும் பாதி பேருக்கு தமிழில் பெயரில்லை எனவும், தமிழில் பேச முடியாது, பிழை இல்லாமல் எழுத முடியாது எனவும் தாம் எல்லா விதத்திலும் தமிழ் பற்று உள்ளவர் என்றார்.

ஒரு மாவட்டத்தில் ஒரு உற்பத்தி  என்பதை மீட்டெடுக்கும் முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது என்றார்.  தொழிற்கல்வியை தமிழில் கொண்டு வர பிரதமர் வலியுறுத்தியும், அந்தந்த மாநில அரசு செய்ய மறுக்கிறது எனவும் நீட் தேர்வை தமிழில் எழுத கூறுகிறார், தமிழை எல்லோரும் கொண்டாடி வருகின்றனர் என்றார்.

நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் வேண்டாம் என்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.  தெலுங்கானாவில் பல பேருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறதுஎனவும் இந்தியை வேண்டாம் என கூறுபவர்கள், கேந்திரிய வித்யாவில் சீட் வாங்கி தர சொல்கின்றனர் என்றார்.

பேசுவதற்கும் எதார்த்த உண்மைக்கும் உண்மையில்லை என்றார். ஆனால் நாங்கள் அப்படியில்லை எனவும் உள்ளதை உள்ளபடி பேசுவதாக கூறினார். தமிழ் நமக்கு உயிர், புதிய கல்வி கொள்கை கூறுவது இன்னொரு மொழியை கற்றுக்கொள்வது, அது ஆங்கிலமாக இருக்கலாம், மற்ற மொழியாக இருக்கலாம், இதை சொன்ன உடன் பாய்ந்து வருகின்றனர் எனவும் தமிழை சரியாக உச்சரிக்க விவாதத்திற்கு தான் தயார் என்றும் இணையத்தில் தவறாக தாக்குதல் நடத்தாதீர்கள் எனவும் அனைவரும் இணைந்து பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கைகுலுக்குவதை தவிர்த்து தமிழர் பாரம்பரியமான கை கூப்பி வணங்குவதை கொரோனா மீட்டெடுத்து கொடுத்துள்ளது எனவும், தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை மறந்து மேல்நாட்டு உணவு வகைகள்  தற்போதைய தலைமுறையை ஆட்கொண்டுள்ளது என்றார்.

இந்தியாவில் உள்ள உணவுகளில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதை கொரோனா காலத்தில் வெளி நாட்டினர் தெரிந்து கொண்டனர் எனவும் பாரம்பரிய பழமையை மீட்டெடுத்தால் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் எனவும் அலோபதி மருத்துவராக இருந்தாலும் எனக்கு நாட்டு மருத்துவத்தில் பிடிப்பு அதிகம் என பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி மாநில ஆளுநர் திருமதி தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார்.   நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் செங்குன்றம் கூட்டு சாலையில் கே.ஆர்.வி கல்வி அறக்கட்டளை தலைவர் கே.ஆர் வெங்கடேஷ் அவர்கள் பூரண கும்ப மரியாதை ஆளுநருக்கு வழங்கினார்.

பின்னர் சால்வை அணிவித்து தங்களது மாவட்டத்திற்கு வருகை தந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார்.  இந்த நிகழ்ச்சியில் நரேஷ் மற்றும் பா.ஜ.க பிரமுகர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க.!