பாஜகவை சேர்ந்த எஸ் சி பிரிவு மாநில தலைவர் பி.பி.ஜி சங்கர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி பூந்தமல்லி நசரத்பேட்டையில் வெடி குண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சாந்தகுமார் என்பவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
அவர் காக்களூரில் தலைமறைவாக பதுங்கி இருந்தார். இவருக்கு பூர்வீகம் திருவள்ளூர் அடுத்த புட்ளூர் கிராமம் இவரது தந்தை சங்கர் ஸ்ரீபெரும்மந்தூர் அருகே அதாவது ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள பகுதி தான் கட்சிப்பட்டு பகுதி அந்த கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு வளர்ந்த சாந்த குமார் கூலிக்கு கொலை செய்யும் கூலிப்படை தலைவரானான். சங்கர் கொலையில் முக்கிய குற்றவாளியாக இருந்த சாந்த குமாரை நேற்று இரவு அதாவது 12ம்தேதி இரவு 12.04.2024 அன்று கைது செய்தனர்.
செவ்வாபேட்டை காவல் நிலையத்தில் விசாரணையில் உயிரிழந்த ரவுடி சாந்தகுமார்.
அவரை விசாரணைக்கு அழைத்து வந்த பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் தனசந்திரன் மற்றும் நசரத்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகிய இருவரும் நேற்று இரவு போலீஸ் வானில் அழைத்து வந்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் தனி அறையில் வைத்து பன்றி கட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது ஏசி தனசந்திரனும் மற்றும் இன்ஸ்பெக்டர் குணசேகரனும் இருவரும் சேர்ந்து ரவுடி சாந்தகுமாரை அடித்ததில் அவர் நிலைகுலைந்து காவல் நிலையத்திலேயே உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு செய்வது அறியாத போலீசார் கூல்டிரிங்ஸ் கொடுத்து அவர் வாயில் ஊற்றி பொறை ஏறி விட்டதாகவும் அப்போது ரௌடி சாந்த குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மயங்கி விழுந்த அவரை உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து என்ன செய்வது என்று தெரியாத தினறும் பூந்தமல்லி ஏசி தனசந்திரன் புது கட்டு கதையை உருவாக்கிக் கொண்டிருப்பதாக இறந்த ரௌடி சாந்த குமார் உறவினர்கள் தெரிவித்தனர்.
பி பி ஜி சங்கர் கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகப் போகிறது அதாவது வரும் 28ம் தேதி வந்தால் ஒரு வருடம் ஆகப்போகிறது சங்கர் கொலை செய்யப்பட்ட தேதி 28 ஏப்ரல் 2023 சங்கர் கொலை தொடர்புள்ள ரவுடி சாந்தகுமார் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய போது போலீசார் அடித்து கொலை செய்யப்பட்டதும் இது ஏப்ரல் மாதம் தான். சங்கரின் நினைவு நாள் வருவதற்கு இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில் ரௌடி சாந்தகுமார் லாக்கப்பில் இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரவுடிகள் பழிக்கு பழி கொலை செய்யும் ஃபார்முலாவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்கின்றனர் பூந்தமல்லி வழக்கறிஞர்கள்.