chennireporters.com

#assaulted a tribal woman பழங்குடி இன பெண்ணை தாக்கிய பா.ம.க வினரை காப்பாற்றும் சப்இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்காத எஸ்.பி.

பழங்குடி இன பெண்மணி மீது தாக்குதல் நடத்திய பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் காவல்துறையினர் மீது திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  அந்த புகாரின் கூறப்பட்டுள்ளதாவது;

 

 

தனலட்சுமி கணவர் பெயர் மாரி பூண்டி அருகே உள்ள மோவூர் கிராமத்தில் பாமகவை சேர்ந்த முன்னால் பஞ்சாயத்து தலைவர் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான தோப்பூர் மீன் பண்ணையில் பணியாற்றி வருகிறேன்.  கடந்த 2019ம் ஆண்டிலிருந்து சுமார் ஐந்து ஆண்டுகள் வரை இந்த இடத்தில்  நானும் எனது கணவரும் வேலை செய்து வருகிறோம். மேலும் இந்த மீன் பண்ணையில் மீன்களுக்கு கோழி குடல் ஆட்டுக்குடல் ஆகியவற்றை வேகவைத்து மீன்களுக்கு இரையாக போடுவது தான் எங்களுடைய வேலை.  இதற்கு மாசம் 5000 ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்தார்கள்.  கோழிக்கு போடும் அரிசியை தான் எங்களுக்கு சாப்பிட கொடுத்து வந்தனர்.  இதைத்தான் நாங்களும் ஐந்தாண்டு காலம் சமைத்து சாப்பிட்டு வந்தோம்.

தற்போது அந்த வேலை எனக்கும் என் கணவருக்கும் பிடிக்காத காரணத்தினால் கடந்த 27ம் தேதி நாங்கள் அந்த மீன் பண்ணையிலிருந்து வேலை செய்ய விருப்பமில்லை என்று பண்ணையின் உரிமையாளர் ஏழுமலையிடம் தெரிவித்தோம். இந்த நிலையில் அவர்களிடம் நாங்கள் 13 ஆயிரத்து 500 ரூபாய் கடனாக பெற்று இருந்தோம். அதற்கு அவர் எங்களை சொல்ல முடியாத வார்த்தைகளால் இருளர் நாய்களுக்கு இவ்வளவு திமிராடி என்று மிக கேவலமான வார்த்தைகளில்  பேசி  என்னையும் என் கணவரையும் அடித்தார். 28ம் தேதி காலை அந்த இடத்திலிருந்து நாங்கள் எங்கள் சமூக மக்களும் உறவுகளும் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டோம். இந்த நிலையில் அன்று இரவு என்னையும் எனது கணவரையும் கணக்கு பார்க்க வர வேண்டும் என்று அவரது வீட்டிற்கு அழைத்தார் நாங்களும் எனது கணவர் மற்றும்  மாமனார் உடன் நானும் இரவு  அவர் வீட்டுக்கு சென்றோம்.

பாதிக்கப்பட்ட தனலஷ்மி.

அந்த இடத்தில் ஏழுமலை நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  நாங்கள் அவரிடம் வாங்கி இருந்த 13 ஆயிரத்து 500 ரூபாய் கடனை திருப்பிக் கொடுத்தோம். அதற்கு ஏழுமலை என்பவர் ஏண்டி உங்களுக்கு இவ்வளவு திமிரா என்று என் தலை முடியை பிடித்து கன்னத்தில் அடித்தார். பிறகு என்னை காப்பாற்றும் படி நான் என் கணவரை அழைத்தேன். அவரையும் ஏழுமலையும் அவரது மகன் டில்லி பாபு என்கிற பாபு எனது கணவர் மூக்கில் அடித்து உதைத்தார். சொல்ல முடியாத ஆபாசமான வார்த்தைகளில் திட்டி இருள பசங்கள சாவுங்கடா என்ற அடித்தார். என் கணவருக்கு மூக்கில் ரத்தம் கொட்டியது பிறகு என்னை பாபு எட்டி என் வயிற்றின் மீது உதைத்தார் இதில் நான் நிலைகுலைந்து கீழே விழுந்தேன்.

மேலும் நாங்கள் வலியால் கதறினோம் அழுதோம் ஆனால் ஏழுமலையும் அவரது  மகன் எங்களை நீங்கள் தான் வேலை செய்யணும் என்று நீ எப்பவுமே எங்களுக்கு அடிமையா தான் இருக்கணும் என்று கூறிக்கொண்டு அடித்தார்கள். பிறகு நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம் .அப்போது ஏழுமலை மனைவி முனியம்மாள் ஓடுறா பாரு இருள தேவிடியா என்று கூறிய அவங்கள விடக்கூடாது அடிடா பாபு என்று கூறினார். மேலும் நாங்கள் இரவு நேரம் என்பதால் மருத்துவமனைக்கு போகாமல் வீட்டிலிருந்து மறுநாள் காலையில் எங்கள் ஊரின் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு என்பவரின் உதவிய கேட்டோம்.

பாதிக்கப்பட்ட தனலஷ்மி.

அவர் அதற்கு எங்களை திருவள்ளுவர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்தார். இந்நிலையில் 29ம் தேதி அன்று ஊடகங்களில் நான் என் கணவர் நடந்ததை கூறினோம். இந்நிலையில் ஏழுமலையின் உறவினரான முன்னாள் தலைவர் சுரேஷ் என்பவர் எங்களை வந்து இரவு மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்து வந்து அவர்களின் காரில் என்னையும் எனது கணவரையும் பெண்ணாலூர் பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து என்னிடம்  3 வெற்று பேப்பரில் கையொப்பம் வாங்கிக் கொண்டு என்னை அனுப்பினார்கள்.

ஏன் கையெழுத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு நான் கைநாட்டு தான் போட்டிருந்தேன் உன்னை அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள் எனவே என்னையும் எனது கணவரையும் சமூக ரீதியாக திட்டிய  ஆபாசமான வார்த்தைகளால் சொல்லி தாக்கி ஏழுமலை அவரது மகன் டில்லி பாபு அவரது மனைவி முனியம்மாள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.  அவருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்பதால் எழுதியதை தலைவர் படித்துக் காட்ட சரியாக இருந்தது என்று தனலட்சுமி ஒப்புக்கொண்டு கைநாட்டு வைத்துள்ளார் இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

தனலட்சுமி இது குறித்து பென்னாலூர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் அந்தப் புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது அதில்1/2/2024 ம் தேதி குற்ற எண். 104/2024 குற்றப்பிரிவு 294b,323, IPC, r/w 4oftnphw act ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ்

சம்பந்தப்பட்ட ஏழுமலை பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருக்கிறார். அவரது மகன் அவரது மனைவி ஆகிய மூன்று பேரும் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுவரை அவர்களை கைது செய்யவில்லை காரணம் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ்  எதிரிகளிடம்  இருந்து தன் வீட்டு குடும்ப செலவுக்காக லஞ்சமாக இல்லாமல் சன்மானமாக சில ஆயிரங்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நாகராஜ் 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக வாங்கினால் 50 ஆயிரம் ரூபாய்க்கு வேலை செய்வார் என்கிறார்கள் பென்னாலூர்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார். நாகராஜ் ஏற்கனவே புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது அவர் லஞ்சம் வாங்காத இடமும் இல்லை அவர் ஓசியில் சாப்பிடாத ஓட்டலும் இல்லை என்கிறார்கள்  புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள். அந்த அளவுக்கு யோக்கிய சிகாமணி தான்  எஸ்.ஐ.நாகராஜ் என்கிறார்கள். அது மட்டுமல்ல திருத்தணியில் வேலை செய்த போது ஒரு சாதி கலவரத்தையே தூண்டினாராம் என்கிறார்கள். இன்னும் பல சொல்லமுடியாத செய்திகள் இருக்கிறதாம்.

இப்படிப்பட்ட நாகராஜ் மீது  போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விசாரணை அதிகாரியை மாற்றி நடந்த சம்பவம் என்ன உண்மை நிலை என்ன என்பதை ஆராய்ந்து பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது மகன் மனைவி மீது நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என்கின்றனர் திருவள்ளூர் மாவட்ட இருளர் பாதுகாப்பு சங்கத்தினர்.

சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ்

மேலும் மேற்படி நபர்கள் மீதும்  சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஊத்துக்கோட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் செய்ய இருப்பதாகவும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க.!