கோடிகளில் புரளும் மணல் மாபியா வக்காலத்து வாங்கும் போலீசாரால் மணல் மற்றும் மன் கடத்தல் அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு, கும்மிடிப்பூண்டி ,கவரப்பேட்டை , ஆரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மணல் மாபியாவாக செயல்பட்டு வருபவர் பாதிரிவேடு கிராமத்தை சேர்ந்த அய்யனார்.
மணல் மாபியாக்கள் அய்யனார் அவரது அப்பா ஆனந்தன்.
இவருக்கு சொந்தமாக 12 சக்கரங்கள் கொண்ட 5 டிப்பர் லாரியும் நான்கு ஹிட்டாச்சிகளும் வைத்து மணல் திருடி வருகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக மன் மற்றும் மணல் திருடுவதையே இதே தொழில் செய்து வருகிறார்கள். இவர் மீது பாதிரிவேடு கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ,ஆரம்பாக்கம் ,ஊத்துக்கோட்டை , பெரியபாளையம் ஆகிய பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. AP- 39-6309 இந்த எண்ணில் பல லாரிகள் வைத்துள்ளார் தமிழ்நாட்டுக்கு போகும்போது AP என்பதை TN என்று மாற்றிக் கொள்வார்கள்.
கடந்த 29ம் தேதி ஊத்துக்கோட்டை காவல்நிலைக்கு உட்பட்ட சூளை மேனி அருகே பெட்ரோல் பங்க் அருகே திருவள்ளூர் எஸ்.பி.யின் சிறப்பு படையை சேர்ந்த போலிஸ் டீம் அய்யனாருக்கு சொந்தமான மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகளை பிடித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். மேலும் போலிசார் வண்டியின் உரிமையாளரான அய்யனார், அவரது தம்பி சரத்து ஆகியோரை போலிசார் தேடி வருகின்றனர். 25 ஆண்டுகளாக போலிசில் சிக்காமல் ஆட்டம் காட்டி வரும் அய்யனார் மற்றும் இவரது தம்பி சரத் ஆகியோரை ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. கனேஷ்குமார் ஐந்து பேர் கொண்ட தனிப்படை அமைத்து தேடிவருகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக மண் கடத்தல் மணல் கடத்தல் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக 5 லாரிகள், 4 இட்டாட்சிகள் உள்ளன. இவர் மீது பாதிரிவேடு, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை போன்ற காவல் நிலையங்களில் இவர் மீது மண் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது பாதிரிவேடு அரசு மருத்துவ மனை அருகில் அரசு புறம்போக்கு இடத்தில் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டி உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, ஆரம்பாக்கம் போன்ற பகுதிகளில் இவர்கள் பல வீட்டுமனைகள் வாங்கி வைத்துள்ளனர். எஸ்.கே.எல்.எஸ் என்ற பெயரில் அதாவது ஸ்ரீ காமாட்சி லாரி சர்வீஸ் என்ற பெயரில் இவர்கள் இந்த திருட்டு மண் மற்றும் மணல் கடத்தும் தொழில் செய்து வருகின்றனர். இதில் மற்ற லாரி உரிமையாளர்களையும் இணைத்துக் கொண்டு லாரி வாடகை மட்டும் கொடுத்துவிட்டு அந்த லாரிகளின் மூலமும் மணல் கடத்துவார்கள் . இவர்களுக்கு பாதிரிவேடு மற்றும் கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி , ஆரம்பாக்கம் ஆகிய காவல் நிலையத்தில் உள்ள போலீசார் இவர்களுக்கு பக்க பலமாக இருந்து உதவி செய்து வருகின்றனர் அதன் அடிப்படையில் இதுவரை இவர்கள் ஒரு வழக்கில் கூட கைதாகாமல் தப்பித்து வருகின்றனர்.
இவர்கள் மீது குண்டர் சட்டம் போடும் அளவிற்கு இவர்களுடைய செயல்கள் இருந்து வந்துள்ளன. ஆந்திராவில் தடா பகுதியில் மணல் மாஃபியாவாக விளங்கி வரும் தடா அன்பு என்பவருடைய வண்டியையும் இவர்கள் வாடகைக்கு எடுத்து வந்து திருட்டு மண் கடத்தி வருகின்றனர். இவரது தம்பி சரத்து தான் இந்த லாரி களில் மண் கடத்தலுக்கு தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.
ஒரே நம்பரில் ஆறு லாரிகளில் மணல் கடத்துவார்கள் நாள் ஒன்றுக்கு 30 லோடிலிருந்தே 40 லோடு மணல் வரை கடத்துவார்கள். ஒரு லோடு மணலின் மதிப்பு ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்பு கொண்டது. ஏறக்குறைய நாள் ஒன்றுக்கு நாற்பத்தி ரென்டு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். (4,200,000)
மணல் மாபியா அய்யனாரின் அப்பா ஆனந்தன்.
மணல் மாபியா அய்யனாரின் அப்பா ஆனந்தன் டிரான்ஸ்பர் என்கிற சினிமா படம் ஒன்றில் அவர் நடித்துள்ளார். அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடையும் நடத்தி வருகின்றார். அந்த கிராமத்தின் கோயிலுக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தையும் மடக்கி வைத்துள்ளனர். அது தவிர பாதிரிவேடு பகுதியில் உள்ள பஞ்சமி நிலங்களையும் அரசு புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து, பிளாட் போட்டு விற்பனை செய்து வருவது தான் ஆனந்தனின் தொழில் . ஏறக்குறைய ஒட்டுமொத்த குடும்பமும் சட்டத்துக்கு புறம்பாகவும் கடத்தல் தொழில் செய்யும் குடும்பமாகவே விளங்கி வருகிறது. இவர்கள் செய்யும் எல்லா ஃபிராடு தனங்களுக்கும் அந்த பகுதியில் உள்ள போலிசார் ஆதரவளித்து வருகின்றனர்.