chennireporters.com

சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்று கேரளாவை அசத்தும் தலித்அர்ச்சகர்.

கேரளாவில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டவர்களில்  முதல் தலித் அர்ச்சகர் ஏடு கிருஷ்ணன் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். பக்தர்கள் அவரின்  பணியை பாராட்டி வருகின்றனர்.

கேரளா மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1200 க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.  அங்கு பிராமணர்களே அர்ச்சகர்களாக  அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில் பிராமணர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக நியமிக்க கேரளா தேவசம் தேர்வு வாரியம் சிபாரிசு செய்தது. அதை ஏற்று அவர்களை கேரளா அரசு  அர்ச்சகர்களாக 36 பேரை நியமித்தது.அந்த 36 பேரில் தலித் சமூகத்தை  சேர்ந்தவர்கள் 6 பேர் ஆவார்.  அவர்களின் ஒருவரான ஏடு கிருஷ்ணன் வயது 22 என்பவர் திருவல்லா அருகே உள்ள மணப்புரம் சிவன் கோவில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.தன்னுடைய குரு கே.கே. அனிருத்தன் தந்திரியிடம் ஆசி பெற்று தற்போதைய தலைமையை அர்ச்சகர் கோபகுமார் நம்பூதிரியுடன் அவர் கோவிலுக்குள் நுழைந்து கர்ப்பகிரகத்துக்கு  சென்று மந்திரம் ஓதி பணியை தொடங்கினர்.

ஏடு கிருஷ்ணன்

இதன் மூலம் கேரளாவின் முதலாவது தலித் அர்ச்சகர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். சமஸ்கிருத மாணவர் ஏடு கிருஷ்ணனின் சொந்த ஊர் திருச்சூர் மாவட்டம் கொரட்டி ஆகும். அவருடைய பெற்றோர் பி. கே. ரவி, லீலா.

அவர் சாஸ்திரங்கள் பற்றி 10 ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளார். தன்னுடைய 15 -வது வயதிலேயே தனது  வீட்டருகே உள்ள கோவிலில் அவர் பூஜை செய்ய தொடங்கினர். தற்போது சமஸ்கிருதத்தில் முதுகலை பட்ட ப்படிப்பில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இவர் 2017ம் ஆண்டு கோயில் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டார். இவர் வேதங்களை நன்கு கற்று உயர் சமூக அர்ச்சகர்களை விட சிறப்பாக பூஜை செய்து வருவதாக பக்தர்கள் இவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க.!