chennireporters.com

டாஸ்மாக் திருட்டு கொள்ளையர்களுக்கு வக்காலத்து வாங்கும் கட்டிங் எஸ்.ஐ.ராஜா.

 பொது மக்களின் வரிப்பணத்தில் தான் நாம் சம்பளம் வாங்குகிறோம் என்ற எண்ணத்தை அரசு அதிகாரிகள் மறந்து லஞ்சம் என்கிற பிச்சை காசு வாங்குவதிலேயே குறியாக இருக்கும் ஒரு சில அதிகாரிகளை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓட விட்டு அடித்தால் தான் திருந்துவர்கள் என்கிற நிலையை அரசு ஊழியர்களே உருவாக்கும் நிலை ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இந்த செய்தி நமக்கு உணர்த்துகிறது.

சமூக வலைதளங்களில் குடிமகன் ஒருவரை சப் -இன்ஸ்பெக்டர் அடித்து துவைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.இந்த செய்தி குறித்து இணையதளத்தில் நெட்டிசன்கள் பல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.  ஒரு சிலர் இந்த சப்இன்ஸ்பெக்டர் அதிமுகவை சார்ந்தவர் அதனால் இவர் திமுக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணத்தில் குடிமகனை அடிக்கிறார் என்றும் சிலர் டாஸ்மாக் கடைக்காரரிடமும் பார் நடத்துபவரிடமும் (லஞ்ச) பிச்சை எடுக்கிறார். 

அவர் எடுக்கும் பிச்சைக்கு ஆதரவாக தனது லட்டியை ஏழை குடிமகனிடம் சுழற்றி அவரது வீரத்தை காட்டுகிறார் அவர் ஆண்மையில்லாதவர் என்றும் கமெண்ட் அடித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆனால் பத்து ரூபாய் கூடுதலாய் வாங்கிவிட்டார் என்று குடிமகன் ஒருவர் கேட்பதை டாஸ்மாக் கடை ஊழியரிடம் பிச்சை வாங்கி அதை பெருமையுடன் சாப்பிடும் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு கோபம் பொங்கி அந்த குடிமகனை அடிக்கிறார்.ஏற்கனவே இருந்த சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கூடுதலாக பணம் வாங்க கூடாது என்று அறிவித்திருந்தார்.  அதன் பிறகு தற்போது பொறுப்பு வகிக்கும் அமைச்சர் முத்துசாமியும் கூடுதலாக பணம் வாங்க கூடாது கண்டிப்பாக பணம் வாங்கக்கூடாது அப்படி வாங்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.இந்த நிலையில் இன்னும் தமிழகம் முழுவதும்  டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கூடுதலாக பத்து ரூபாய் பணம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதை தடுக்க முடியாமல் இருக்கிறது அரசு.

அது தவிர டாஸ்மாக்கில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் பணிக்கு வராமல் கூலிக்கு வேலை செய்ய ஆட்களை நியமிக்கிறார்கள் இப்படி பல இடங்களில் தினக்கூலிக்கு டாஸ்மாக் கடையில் பணி செய்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். விற்பனையாளர் பெயரில் போலியாக வேலை செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சம்பந்தப்பட்ட கடையின் மேற்பார்வையாளருக்கும் முக்கிய அலுவலர்களுக்கும்  இந்த செய்தி தெரியும். அது குறித்து இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்காத டாஸ்மாக் நிர்வாகம்  பொதுமக்களை ஏமாற்றி கௌரவ பிச்சையாக திமிர்த்தனமாக மிரட்டி பணம்வாங்குவதை  பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்தும் காக்கி சட்டை க்காரர்கள் பொது மக்களுக்கு ஆதரவாக செயல்படாமல் யாரோ கொடுக்கிற பிச்சை காசுக்காக ஏழை குடிமகனை அடிப்பதை தவிர்க்க வேண்டும் பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் போலீஸ்காரர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் தான் சப் -இன்ஸ்பெக்டர் ராஜாவின் செயல் இருந்தது.சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் எல்லா செயல்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி நேர்மையுடன் பணியாற்றினால் அரசுக்கும் போலீஸ் நிர்வாகத்திற்கும் நல்ல பெயர் ஏற்படும் அதை தவிர்த்து சப்- இன்ஸ்பெக்டர் ராஜா போன்றவர்கள் பிச்சைக்காரர்களின் பணத்திற்கு ஆசைப்பட்டு வீரத்தை காட்டுவது காக்கி சட்டைக்கு அழகல்ல இது கடும் கண்டனத்திற்குரியது என்கின்றனர் இணையதள நெட்டிசன்கள்.சப்- இன்ஸ்பெக்டர் ராஜா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட குடிமகனிடம் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் இல்லையென்றால் அடி வாங்கிய குடிமகன் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாவை இரண்டு அடிகளாவது அடிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட வேண்டும்.தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மேற்பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு கோடியில் இருந்து பத்து கோடி ரூபாய் வரை சொத்து இருக்கிறது. இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா மறுத்தால் அரசு தனி ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சொத்து கணக்கை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் அப்பொழுது உண்மை என்னவென்று தெரியும்.

 

இதையும் படிங்க.!