chennireporters.com

#parliament election பாராளுமன்ற தேர்தலில் எப்பாடி தலைமையிலான அணி வெற்றி வாகை சூடும் தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கினைப்பாளர் கே.ஆர். சுப்பிரமணியன் பேட்டி.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் தனது சாதி மக்களை அடகு வைத்து  தன் குடும்பம் வளர்வதற்காக தன்னை வளப்படுத்திக் கொள்ள வன்னிய மக்களை இறையாக்கி அரசியல் பழிவாங்குகிறார். மக்களின் பொருளாதார வளர்ச்சியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் குடும்பத்தை வளப்படுத்திக் கொள்கிறார் என்று தமிழக தேசிய விவசாயிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே ஆர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி பலமாக இருக்கிறது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா எந்த அளவிற்கு கட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தார்களோ அதே அளவிற்கு எடப்பாடியும் கட்சியை கட்டு கோப்புடனும்  சிறப்பாக  வழி நடத்தி வருகிறார். தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கினைப்பாளர் கே.ஆர். சுப்பிரமணியன்

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் தனது மக்களுக்கு இட ஒதுக்கீடு  10.5% சதவீதம் கேட்டபோது இல்லை என்று மறுக்காமல் கொடுத்தவர் எடப்பாடியார்.  ஆனால் அவர்கள் நன்றி கடனுக்காகவே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்க வேண்டும். நன்றியை மறந்து விட்டு  அவர்கள் பாஜக கூட்டணியில் இடம் பெற்றது வருந்த தக்க செய்தியாகும் என தெரிவித்தார்.  புரட்சி கலைஞர் விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு அந்த கட்சியை ஜெயலலிதா எந்த அளவுக்கு வீரத்துடனும் சிறப்பாக கட்சி பணியை ஆற்றி வந்தாரோ அதே போல் பிரமலதா விஜயகாந்த் தனது கட்சியை கட்டி காத்து  சிறப்பாகவும் வழி நடத்தி வருகிறார்.  தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டில்  உறுதியாக நின்று அதிமுக கூட்டணிக்கு வந்த அவருடைய தைரியத்தை பாராட்டுகிறேன் என்று கே ஆர் எஸ் மணி தெரிவித்தார்.

ஆனால் டாக்டர் ராமதாஸ் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு நிலையான நிலைப்பாட்டை எடுக்காமல் தன் குடும்பம் சுயநலத்திற்காக வன்னிய மக்களை அடகு வைத்து அதில் சுய லாபம் பார்த்து தன் குடும்பத்தை செழிப்பாக்கி கொள்ளுகிறார்.  தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சொன்னார் வந்தால்  சாட்டையால் அடியுங்கள் என்று சொன்னார் . ஆனால் தனது மகனை அரசியலுக்கு கொண்டு வந்தார். தற்போது தனது மருமகள் சௌமியா அன்புமணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார். இப்படி அரசியலில் நேர்மையற்றவராக டாக்டர் ராமதாஸ் இருந்து வருகிறார் .

ஆனால் இந்த தேர்தலில் பாஜகவும் பாஜகவை சார்ந்திருக்கிற கூட்டணிகளும் கடுமையான ஏமாற்றத்துடன் தோல்வியை தழுவும் டெபாசிட் வாங்குமா என்று கூட சந்தேகம் தான்.  பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மக்களே கடுமையாக  ராமதாசையும் அவரது மகன் அன்புமணியையும் எதிர்க்கிறார்கள். கடுமையாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.Palaniswami: Large swathes of Tamil Nadu left parched, Edappadi K  Palaniswami faces heat

அந்த இயக்கம் வலுவாக இருப்பதற்கு பாடுபட்ட காடுவெட்டி குருவின் மகளும் குடும்பத்தினரும் கடுமையாக விமர்சிக்கின்றனர். காடுவெட்டி குருவின் மருத்துவ செலவிற்கு பணம் கூட தர முடியாமல்  அந்த குடும்பத்தை ஏமாற்றியவர். அவர்கள் குடும்ப அரசியலை கடுமையாக எதிர்க்கிறோம் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் சொல்லி இருக்கிறார்கள் என்று சொன்ன கே ஆர் எஸ் மணி தன்னுடைய பதவி சுகத்திற்காக தான் குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக தன் சமூகத்தை சார்ந்த எம்பி சி.வி.  சண்முகத்தை கொலை செய்ய பார்த்தவர் அரசியல் நேர்மை இல்லாத அரசியல் தலைவராக இருந்து வருகிறார்  ராமதாஸ்.  அது மட்டுமா ஜெயலலிதா உடன் கூட்டு வைக்க மாட்டேன் அப்படி கூட்டு வைத்தால் பெற்ற தாயுடன் உறவு வைத்துக் கொள்வதற்கு சமம் என்று பேசிய  ராமதாஸ் மீண்டும் ஜெயலலிதா உடன் தான் கூட்டணி வைத்தார் மறப்போம் மன்னிப்போம் என்ற மனநிலையில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பெருந்தன்மையால் அந்த சம்பவம் அப்போது மறக்கப்பட்டு தனது கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்த ராமதாசை ஏற்றுக் கொண்டார்.

தமிழகம் முழுவதும் அதிமுக போட்டியிடுகின்ற எல்லா தொகுதிகளிலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆதரவளித்து பிரச்சாரம் செய்யும். எடப்பாடி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற கடுமையாக உழைத்து அவரது கரங்களை வளுபடுத்துவோம் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள கரூர், நாமக்கல், கோயமுத்தூர் , ஈரோடு போன்ற தொகுதிகளில் கடுமையாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து எடப்பாடியாரின் கைகளில் வெற்றிக்கனியை ஒப்படைப்போம் என்று  தெரிவித்தார். பாஜகவை கண்டு ஒருபோதும் எடப்பாடியார் அஞ்சியதில்லை.  பாஜக எடப்பாடியாருக்கு செய்த துரோகங்களை பட்டியலிட முடியாது அந்த அளவிற்கு பல துரோகங்களை பாஜக செய்துள்ளது. பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று வெளிப்படையாக பேசியவர் ஆனால் பாஜக தான் எடப்பாடியாருடன் கூட்டு வைத்துக் கொள்ள  உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று துடித்தது.

தமிழக அரசியல் களத்தில் எடப்பாடியாரின் கை  தற்போது ஓங்கி இருக்கிறது. கள நிலவரம் மாறி இருக்கிறது. பாஜக கூட்டணி டெபாசிட் இழக்கும் .  எடப்பாடி தலைமையிலான கூட்டணி போட்டியிடும் அனைத்து  இடங்களில் மாபெரும் வெற்றி பெறும்.

இதையும் படிங்க.!