2000 ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை நீக்க வேண்டும் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத்சிங் குன்டன் பூர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார் .
இந்த கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்..நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் எந்தத் துறையிலும் நடக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு லஞ்சம் கொடுத்து காரியங்கள் நிறைவேற்ற பழகிவிட்டனர்.கடந்த ஆண்டு 2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2020 டிசம்பர் 31 வரை 616 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதாவது தினமும் இரண்டு மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன.அதிகாரிகளுக்கு லஞ்சமாக 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் நோட்டுகள் தான் அதிக அளவில் கொடுக்கப்படுகின்றன.
இந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தி படத்துக்கு செய்யும் அவமரியாதை என்று தான் கூற வேண்டும்.அதனால் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தியின் படத்தை நீக்க வேண்டும்.
அதே போல அசோகச் சக்கரத்தின் படத்தையும் நீக்க வேண்டும்.ஏழைகள் அதிகமாக பயன்படுத்தும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், இருபது ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய், மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளில் மட்டும் மகாத்மா காந்தி படத்தை அடித்தால் போதும்.
இதுதான் மகாத்மா காந்திக்கு நாம் செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும் என்று அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் எம்.எல்.ஏ கூறியுள்ள தகவல் ஒருபுறம் உண்மைதான் என்றாலும் கூட திடீரென்று காந்தியின் படத்தை நீக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்