chennireporters.com

ஆவடி பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரி 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் விசாரணை செய்ய அதிகாரி நியமனம் அரசு உத்தரவு.

ஆவடி பட்டாபிராம் அடுத்த தண்டுறை பகுதியில் 11 சென்ட் நிலத்தை பதிவு செய்த மூன்று லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆவடி பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் தனி அதிகாரியை நியமித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

ஆவடி அடுத்த தண்டுறை தந்தை பெரியார் சாலை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு அந்தப் பகுதியில் 11 சென்ட் நிலம் உள்ளது. சர்வே நம்பர் 350/4 ,B மற்றும் 2A இதன் மதிப்பு சுமார் 80 லட்சம் ஆகும். மேற்படி இடத்தை சேர்ந்த விநாயகம் மகன் அமுலு என்கிற அமல்ராஜ் என்பவரின் தம்பி சோமசுந்தரம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு சண்முகத்துக்கு சொந்தமான இடத்தை போலியான ஆவணங்கள் தயார் செய்து மேற்படி இடத்தை தனது பெயருக்கு ஆவடி பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டார்.  நிலத்தின் உரிமையாளர் சண்முகம் வராமலேயே ஆவடி பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரி முறைகேடான ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு செய்துள்ளார் என்று குற்றம் சாட்டுகிறார் சண்முகத்தின் மகன் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் .

இது தொடர்பாக சண்முகத்தின் மகன் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் மாவட்ட பதிவாளர் பத்திரப்பதிவுத்துறை தலைவர் லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் ஆகியோருக்கு புகார் அளித்திருக்கிறார். அந்த புகார் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்  அதாவது சண்முகத்தின் இடத்தை போலி ஆவணத்தின் மூலம் பதிவு செய்ய சோமசுந்தரத்திடம் லஞ்சமாக வாங்கிய மூன்று லட்ச ரூபாய் தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் திருவள்ளூர் மாவட்ட பதிவாளரை விசாரணை அதிகாரியாக நியமித்து இருதரப்பினரையும் விசாரித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் .

இந்த நிலையில் மேற்படி இடத்தை சோமசுந்தரம் வேறு ஒருவருக்கு அடமான பத்திரம் போட்டுள்ளார். ஏற்கனவே போலியான ஆவணம் என்பதை தெரிந்தும் மூன்று லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு இடத்தை பதிவு செய்த மல்லிகேஸ்வரி பிரச்சனைக்குரிய இடத்தை மீண்டும் வேறு ஒருவருக்கு அடமான பத்திரம் போட்டதையும் பதிவு செய்து இருக்கிறார். ஏற்கனவே செய்தது தவறு என்பதை திருத்திக் கொள்ளாத மல்லிகேஸ்வரி மீண்டும் ஒரு தவறை செய்கிறார் என்றால் அவருக்கு அந்த பத்திரம் பதிவு செய்ததில் எவ்வளவு லஞ்சம் கை மாறி இருக்கிறது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

இது தொடர்பாக சண்முகம் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில்  சோமசுந்தரம் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மல்லிகேஸ்வரி மீது முதல் முறையாக லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது.

அந்த ஆதாரத்தின் அடிப்படையில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் விசாரணை அதிகாரியை நியமித்து உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மல்லிகேஸ்வரி கடந்த மூன்றரை ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலியான ஆவணத்தை பத்திரப்பதிவு செய்துள்ளார். அவர் மீது பல பேர் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் மல்லிகேஸ்வரிக்கு____போடப்படும் என்கிறார் ஆவடியில் பத்திர பதிவு அலுவலகத்தில் உள்ள நேர்மையான அதிகாரி ஒருவர்.

இதையும் படிங்க.!