chennireporters.com

உதயநிதி வரவில்லை என்றால் செத்து போய் விடுவேன். போலீசை மிரட்டிய இளம் பெண்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியை நான் பார்த்தே ஆக வேண்டும் இல்லாவிட்டால் கீழே இறங்கி வரமாட்டேன் என்று செல்போன் டவரில் ஏறி நின்று செத்து போய் விடுவேன் என்று அழுது அடம் பிடித்த இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

நாளுக்கு நாள் எம்.எல்.ஏ உதயநிதியின் செயல்பாடுகள் தொகுதி மக்களை ஈர்த்து வருகின்றது.

மு.க. ஸ்டாலின் மகன் என்ற தகுதியைத் தவிர இவருக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது என்று பல பிரச்சாரங்களில் எதிர்தரப்பினர் கேள்வி கேட்டனர் உதயநிதியை எதிர்த்தது பேசியவர்கள் பலர்.

இந்த சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கு பிறகு உதயநிதியின் அயராத செயல்பாடுகளால் அவரின் அதிரடி நடவடிக்கைகளால் தீராத உழைப்பால் இன்று தனக்குத்தானே ஒரு பாதையை உருவாக்கி அதில் வெற்றி நடை போட்டு வருகிறார்.

இதனால் சொந்த தொகுதியில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் மொத்த அரசியல் களத்திலும் உதயநிதியின் அரசியல் மவுசு கூடி வருகிறது அதே சமயம் பெண்கள் மற்றும் குழந்தைகள் முதியவர்கள் என எல்லா தரப்பிலும் உதயநித மீது பாசமும் மரியாதையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

எங்கு சென்றாலும் தன் வீட்டுப் பிள்ளை போலவே உதயநிதியை பார்த்து தங்கள் பகுதியில் உள்ள குறைகளை சம்பந்தப்பட்ட பெண்களே சொல்லி வருகிறார்கள் உடனடியாக அந்த பிரச்சினைகளை சரி செய்து தருகிறார்.

இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு இளம்பெண் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டார் உதயநிதியை பார்த்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று பிடிவாதம் பிடிக்க தொடங்கினார்.

திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜிலா அவரது கணவர் பெயர் ராஜேஷ் குடும்ப தகராறு காரணமாக கணவனும் மனைவியும் தனித்தனியாக வசித்து வந்தனர்.

ராஜிலா கன்னியா குமரியில் தன் அம்மா வீட்டில் வசித்து வந்தார் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் திருவேற்காடு வந்தார்.

வந்தவுடன் கணவரிடம் பணத்தையும் நகையையும் கேட்டு சண்டை போட்டுள்ளார் இதனால் மறுபடியும் ரெண்டு பேருக்கும் சண்டை நடந்ததாக தெரிகிறது.

எனவே பூவிருந்தவல்லி மகளிர் போலீசாரிடம் இது சம்பந்தமாக ராஜிலா புகார் அளித்தார் ஆனால் அந்த புகாரை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை என தெரிகிறது.

தன்னுடைய புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து காணப்பட்டார் ராஜிலா இதனால் நேற்று அந்த ஸ்டேஷனுக்கு எதிரே இருந்த 200 அல்ல அடி உயரம் கொண்ட ஒரு செல்போன் டவரில் கடகடவென ஏறினார்.

புகைப்படம் நன்றி தந்தி டிவி

உச்சிக்கு சென்றவர் திடீரென தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார் இதை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

செல் போன் டவரின் உச்சியிலிருந்த ராஜிலாவிடம் கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்டனர் அந்த பெண் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.

திடீரென எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் நான் கீழே இறங்குவேன் என்று என்று சொன்னார் தயவு செய்து கீழே இறங்கி வாங்க ராஜிலா என்று போலீஸ்காரர்கள் மைக்கில் கேட்டுக்கொண்டனர்.

ஆனாலும் அந்தப் பெண் உதயநிதி எங்கே அவர் அவர் வந்தால் தான் கீழே இறங்குவேன் என்று பிடிவாதமாக சொல்லி விட்டார்.

இதையடுத்து பூவிருந்தவல்லி நகர திமுக செயலாளர் ரவிக்குமார் டவரில் இருந்த பெண்ணிடம் உங்களிடம் என்னை பேச சொல்லி உதயநிதி ஸ்டாலின் தான் இங்கே அனுப்பி வைத்தார்.

உங்ககிட்ட செல்போன் வீடியோ காலில் அவர் பேச ரெடியாக இருக்கிறார் கீழே இறங்கி வாங்க என்று அழைத்தாரார் அதன் பிறகே அந்த பெண் கீழே இறங்கி வந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி அட்வைஸ் தந்து ஒரு வழியாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க.!