திருவள்ளூர் அருகே உள்ளது சிறுவானூர் கண்டிகை கிராமம்.இந்த கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் , பவானி தம்பதியின் மகன் ஹேமநாத் அந்த பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்5 ம் வகுப்பு படித்து வருகிறான்.
மாணவன் ஹேம்நாத் உலக பொது மறையான 1330 திருக்குறளை மனப்பாடம் செய்து புத்தகத்தை பார்க்காமல் சொல்லி சாதனை படைத்துள்ளான்.மேலும் சிறுவன் ஹேமநாத் முதலமைச்சரிடம் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாணவன் ஹேம்நாத்தை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் V.வருண்குமார் பாராட்டினார்.எஸ்.பி. முன்பு திருக்குறளை ஹேமநாத் சொல்லி காட்டினான்.மாணவர்களின் முயற்சிக்கும், வளர்ச்சிக்கும் என்றும் தான் துனை நிற்பதாகவும் வருண் குமார் தெரிவித்தார்.
மாணவன் ஹேமநாத்துக்கு எஸ்.பி. வருண் குமார் பாரதியார் கவிதைகள் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.மாணவனின் அபார திறமையை கண்டு அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.