அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் வேணுகோபால் மக்களுக்கான எந்த பணிகளையும் செய்யவில்லை என்பதாலேயே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்தார். மக்களின் எதிர்ப்பின் காரணத்தால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி ஜெயக்குமார் வெற்றி பெற்றார். குறிப்பாக புட்லூர், வேப்பம்பட்டு பட்டாபிராம், போன்ற பகுதிகளில் உள்ள மேம்பால பணிகள் இதுவரை செய்து முடிக்கப்படவில்லை.அதனை விரைவில் முடித்து தருவதாகவும் கிராமப்புற பகுதிகளில் சமுதாயக்கூடம் மற்றும் சாலை வசதிகளை செய்து தருவதுதான் தனது முக்கிய வாக்குறுதியாக வைத்து ஜெயக்குமார் வாக்கு சேகரித்தார் அதன் அடிப்படையில் வெற்றி பெற்றார்
ஆனால் வெற்றி பெற்ற பிறகு இதுவரை எந்தவிதமான மேம்பால பணிகளும் முடிக்கப்படாமல் நிலுவையிலே உள்ளது. அவர் மக்களையும் அவர் சார்ந்திருக்கிற கட்சியினரைக்கூட அவர் திருப்தி படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளதுமாறாக தன்னுடைய எம்பி மேம்பாட்டு நிதியின் கீழ் வழங்கப்படும் வேலைகளுக்கு யார் கமிஷனர் தருகிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் பணிகளை ஒதுக்கி தந்து செய்து முடித்தார். ஆனால் அவரது கட்சியினர் பதவியில் உள்ள பஞ்சாயத்துகளில் எந்தவிதமான பணிகளையும் அவர்களுக்கு தரவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துவருகிறது.ஆக்கப்பூர்வமான பணிகளை எதையும் ஜெயக்குமார் செய்யாததால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு வாய்ப்பு அளித்தால் நிச்சயம் திருவள்ளூரில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றே சொல்லுகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். அது தவிர திமுகவினரையும் அவர் அனுசரித்து போகாததால் கடும் எதிர்ப்பு மனநிலையிலேயே திமுகவினரும் பொதுமக்கள் உள்ளனர்.மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிப்பூண்டி,, பொன்னேரி, புழல் ஆகிய பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுஇந்த இடங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் எந்த விதமான நிவாரண உதவிகளையோ அல்லது பொது மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. எந்த வகையிலும் இதுவரை நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடவில்லை. அவர் சார்பாக காங்கிரஸ் கட்சியும் எந்தவித நிவாரண பணிகளையும் மேற்கொள்ளவில்லை. அதனால் வரும் எம்பி தேர்தலில் அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அவரது கட்சியினரே சொல்லுகிறார்கள். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் கூட தரவில்லை என்றாலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லியிருந்தால் கொஞ்சம் நிம்மதியை தந்திருக்கும் ஆனால் தொகுதி பக்கமே தலை காட்டாமல் இருப்பதால் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்கிறார்கள் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள்.