chennireporters.com

திருவள்ளூர் அருகே திருப்பாசூரில் நினைத்ததை நிறைவேற்றும் குலம் காக்கும் ஐயா முனீஸ்வரர் ஆலயம்.

திருவள்ளூர் அருகே  பாடல் திருத்தலம் பெற்ற திருப்பாச்சூர் கிராமத்தில் வேண்டியதை கொடுக்கும் குலம் காக்கும் முனீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.  இந்த ஆலயத்தில் ஸ்ரீஉச்சிஷ்ட காளி, நாகாத்தம்மன் ஆகிய தெய்வங்களும் பிரதிஷ்ட்டை  செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலின் சிறப்பு குலம் காக்கும் ஐயா முனீஸ்வரனை நினைத்து பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.பக்தர்கள்  வீட்டில் பத்து நாட்கள் அல்லது 15 நாட்கள் ஒரு மாதம் அல்லது ஒரு மண்டலம் என கலசம் வைத்து  வழிபட்டு வந்தால் தங்களது வேண்டுதலை குலம் காக்கும் முனீஸ்வரன் வெற்றிகரமாக செய்து தருவார். ஐயா முன் பக்தர்கள் கோரிக்கை வைத்தால் அதை சிறப்புடன் செய்து தரும் வல்லமை படைத்தவர். குறிப்பாக வியாபாரம், குழந்தை பேறு, பில்லி, சூனியம், பொருளாதார என எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் குறிப்பாக பெண்களின் உடல் கோளாறு, உதிரப்போக்கு, வாழ முடியாமல் கடைசியில் மரணம் தான் முடிவு என்கிறவர்கள் கூட இங்கு வந்து முனீஸ்வரனை வழிபட்டு நலமுடன் திரும்பும் உயிர் கொடுக்கும் முனீஸ்வரனாக திகழ்ந்து வருகிறார். அதேபோல காளி தேவிக்கும், நாகாத்தம்மனுக்கும் பக்தர்கள் வேண்டுதலை வைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் கை கூடும் வல்லமை படைத்த கோயிலாக திகழ்கிறது இந்த திருக்கோயில். ஸ்ரீ உச்சிஷ்ட காளியம்மனுக்கும்,  நாகாத்தம்மனுக்கும் பல காய்கறிகள் போட்டு சமைத்து அம்மனுக்கு படைத்தால் அம்மன் மனம் குளிர்ந்து வேண்டிய வரத்தை தருவாள் என்கிறதுஐதீகம் அதே போல குலம் காக்கும் முனீஸ்வரனுக்கு சுருட்டு, பிராந்தி, கரி,  கருவாடு, போட்டு சமைத்த உணவுகளை படையில் போட்டால் மனம் உருகி வேண்டி கொண்டாள் நினைத்த காரியங்கள் கைகூடும்.

இந்த குலம் காக்கும் முனீஸ்வரர்,காளி, நாகாத்தம்மன் ஆலய புதுப்பிக்க கருவறை மண்டபங்கள் கட்டும் திருப்பணி வேலைகள் நடை பெற உள்ளது. இந்த பணிகளுக்கு பக்தர்கள் தங்களால் முடிந்த பொருட்களை இந்த திருக்கோயில் பணிக்கு வழங்கலாம்.சிமெண்ட், ஜல்லி, மனல்,செங்கற்கள் போன்ற பொருட்களை வாங்கித் தந்தால் நன்றாக இருக்கும் என்று ஆலய நிர்வாகிகள் கருதுகின்றனர். நிதி ஆளிக்க விரும்புவோர்  இந்த செல் நம்பருக்கு 9894563184  கூகுல் ஃபேவில் அனுப்பலாம். எனவே பக்தர்கள் கட்டட பணிக்கு தேவையான பொருட்களை வாரி வழங்கி ஐயாவின் அருளையும் அம்மனின் அருளையும் பக்தர்கள் பெறு மாறு  ஆலய பணி குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர். வருடாந்திர நிகழ்வு சித்ரா பௌர்ணமி பெருவிழா ஆடி மாத திருவிழா மாதந்தோறும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் மாலை. 6 மணி அளவில் சிறப்பு ஆராதனையும் அபிஷேகம் நடைபெறும் அந்த சமயத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடலாம்.

இதையும் படிங்க.!