chennireporters.com

நடுங்கிய பாஜக அடிக்க பாய்ந்த இளைஞர் காங்கிரஸ்.

சென்னை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களால் பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் நிலைகுலைந்து போனார்கள் ஆக்ரோஷமாக வெறிகொண்டு வந்த காங்கிரஸ் தொண்டர்களின் வேகத்தைக் கண்டு பாஜக அலுவலகம் பதறிப்போனது.

ராகுல் காந்தியின் எம் பி பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் மோடிக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்து வருகிறது.  இந்நிலையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகை விடும் போராட்டம் நடைபெற்றது.

இன்று மாலை 5 மணி அளவில் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர்  நரேந்திர தேவ் , மாநில பொதுச்செயலாளர் காங்கை குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து புறப்பட்டு தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முன்னதாக இரண்டு புறங்களிலும் போலீசார் தடுப்பு ஏற்படுத்தி  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தனர். அதையும் மீறி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரதமர் மோடி எதிராக கோஷமிட்டனர்.

மோடியின் படத்தை கிழித்தெறிந்தனர். உடனடியாக வழிமறித்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸ் வானில் ஏற்றினர். அதையும் மீறி தேவ் ஆனந்த், காங்கை குமார் ஜெனித் ஆகியோர் தடுப்பை மீறி பாஜக அலுவலகம் உள்ள சாலையில் மோடிக்கு எதிராக கோஷமிட்டு ஓடினர்.

அப்போது வழிமறித்த போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி போலீஸ் வானில் ஏற்றினர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தொண்டர்களும் காங்கிரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

போலீஸ் வேனியிலும் பாஜகவுக்கு எதிராக கடுமையான கோஷம் எழுப்பினார்கள். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களை மாம்பலம் காவல் நிலையத்தில் கைது செய்து அடைத்து வைத்தனர்.  பின்னர் 7 மணி அளவில் போலீசார் அவர்களை விடுதலை செய்தனர். இந்த போராட்டத்தில் மாநில செயலாளர்கள் அம்பத்தூர் ஜெனித், ஓட்டேரி சதிஷ், ரகு, தருமபுரி ஜீவா, நித்தீஷ், கோடுவெளி மாவாமணி, ஊத்துக்கோட்டை சதிஷ் ,பூவை தினேஷ், ராஜா, கார்திக், ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க.!