chennireporters.com

குழந்தைகளை காப்பாற்றுங்கள், ஒழுக்கமில்லாத மனைவி மீது கணவர் டி‌.ஜி.பி.யிடம் புகார்.

கணவனை ஏமாற்றி ஏற்கனவே இரண்டு திருமணம் செய்த பிராடு பெண் குறித்து தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு அவர்களுக்கு அபுதாபியில் இருந்து கடிதம் எழுதி இருக்கிறார் கார்த்திகேயன் என்பவர்.

அவர் கடிதத்தில் தன்னுடைய மனைவி நடத்தையில் சரியில்லாதவர் என்றும் பெற்ற மகள்களை என்னிடம் காட்டாமல் திருவள்ளூரில் பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்றும் டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி இந்த கார்த்திகேயன் மனைவி வசந்தி ப்ரியஸ் என்பவர் சில தினங்களுக்கு முன்பே அவர் நடத்தி வரும் தையல் கடைக்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் வெட்டியுள்ளனர்.   இந்த செய்தி குறித்து வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பப்பித்தா விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணையில் வசந்தி ப்ரியஸ்  பல ஆண்களுடன் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.   இந்த வழக்கு விசாரணை தற்போது விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது . இந்த செய்தி குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தியை பார்த்து அறிந்து கொண்ட அவரது கணவர் தமிழக காவல்துறை இயக்குனருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் தனது மகள்களின் எதிர்காலம் பாழாகிவிடும் இவரை போல குழந்தைகளையும்  அவர்களுடைய எதிர்காலத்தையும் பாழாக்கி விடுவார் எனவே எனது குழந்தைகளை காப்பாற்றி தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .

அது தவிர காலாவதியான பாஸ்போர்ட் வைத்து இங்கே சட்டத்திற்கு புறம்பாக தங்கி உள்ளார் .

அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கார்த்திக் டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

விடுநர் . D. Karthikeyan
Post Box 2664 1 Oscar building 6th floor
room number 602 air port road Abu Dhabi UAE

பெறுநர்: உயர்திரு சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள் காவல்துறை தலைமை இயக்குனர் சென்னை தமிழ்நாடு

ஐயா; வணக்கம் என் பெயர் கார்த்திகேயன் நான் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வளர்புரம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான் தற்போது அபுதாபியில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.

 

அந்த நிறுவனத்தில் பணியாற்றும்போது அங்கு என்னுடன் பணியாற்றிய இலங்கையை சேர்ந்த வசந்தி ப்ரியஸ் என்ற பெண்ணை இந்திய தூதரகத்தில் 2005 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.

திருமணம் ஆன இரண்டு ஆண்டுகள் ஒழுக்கமான பெண்ணாக இருந்தார் எங்களுக்கு லக்க்ஷனா மற்றும் கவிதா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன.

ஆரம்பத்தில் ஒழுக்கமான குடும்பப் பெண்ணை போல நடந்து கொண்ட வசந்தி பிற்காலத்தில் அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது.

எனக்கு தெரியாமல் ஒரு சில ஆண்களுடன் கூடா நட்பு வைத்திருந்தார்.  இது தொடர்பாக நான் அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் சரியான பதில் சொல்லவில்லை.

ஒருநாள் நான் வீட்டில் இருக்கும் பொழுதே அடையாளம் தெரியாத ஒருவர் உள்ளே நுழைந்து என் மனைவியின் பெயர் சொல்லி அழைத்தார்.  நீங்கள் யார் என்று கேட்டேன் அவர் அதற்கு பதில் சொல்லவில்லை.

உடனே குறிக்கிட்ட வசந்தி அவர் என்னுடைய நண்பர் உன் வேலையை பார் என்று என்னை அவமரியாதையாக பேசி ஒதுக்கினார்.  அதன் பிறகு நான் அவரிடம் கேட்டதற்கு சரியான பதில் இல்லை நீ ஒழுங்காக ஊருக்கு சென்று சம்பாதித்து எனக்கு போடு என்று சொன்னார்.

நீ எனக்கு தேவையில்லை சம்பாதித்து பணம் அனுப்புவதற்கு மட்டும்தான் நீ தேவை என்று என்னை ஒதுக்கி வைத்தார்.   அவமரியாதை பேசி அவமானப்படுத்தினார்.

அதன் பிறகு நான் அவரை பற்றி விசாரித்த போது திருவள்ளூர் ஆயில் மில் பகுதியைச் சேர்ந்த கமல் என்ற ரியல் எஸ்டேட் நடத்தும் புரோக்கருடன் அவருக்கு பழக்கம் இருந்தது தெரியவந்தது.

அது குறித்து நான் கேட்டபோது அவர் ஏதும் பதில் சொல்லாமல் விவாகரத்து வழக்கு தொடுத்தார்.  அந்த வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பே அவர் வைத்திருந்த தையல் கடையில் அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் அவரை கத்தியால் வெட்டி சென்று விட்டனர்.

இது தொடர்பாக திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அவர் நடத்தை சரியில்லாமல் பல ஆண்களுடன் பழக்கம் இருப்பதாக தெரிகிறது.

அவருடைய வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து வசதி வாய்ப்புகளையும் நான் செய்து கொடுத்திருக்கிறேன்.  அரக்கோணம், திருவள்ளூர் ஈக்காடு பகுதிகளில் வீட்டுமனை வாங்கி வைத்திருக்கிறேன்.  எனது தம்பி பெயரில் ஒரு மாருதி கார் வாங்கி கொடுத்திருக்கிறேன் . பல லட்ச ரூபாயை நான் அவருக்கு சம்பாதித்து கொடுத்திருக்கிறேன்.

அவரை கொலை வெறி தாக்குதல் நடத்திய செய்தி சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

என்னை அவர் விவாகரத்து செய்யாமலேயே வேறு ஒருவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தை பெற்றதாக தெரிய வருகிறது.  அவர் தற்போது வேறு ஒருவரின் பிடியில் இருப்பதாகவும் அவருக்கு பிறந்த ஆண் குழந்தையை வளர்த்து வருவதாகவும் நான் கேள்விப்பட்டேன்.

என் குழந்தைகளை பார்ப்பதற்கு என்னையும் என் அம்மா மற்றும் தம்பிகளை பார்க்க அனுமதிக்கவில்லை அவர் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வருகிறார்.  பலமுறை என் குழந்தைகளை பக்கத்து வீட்டில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவர் வீட்டில் விட்டு தனியாக இரண்டு மூன்று நாட்கள் வெளியூரில் போய் தங்கி விட்டு வருகிறார்.

என் குழந்தைகளின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை என் குழந்தைகளின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அவளின் இந்திய குடியுரிமை பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது சட்டத்திற்கு புறம்பாகத்தான் அவர் தற்போது தமிழகத்தில் தங்கி வருகிறார்.

எனவே என் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி சட்டத்திற்கு புறம்பாக தங்கி உள்ள வசந்தி மீது நடவடிக்கை எடுத்து மனிதாபிமானத்துடன் என் குழந்தைகளை போலீஸ் அதிகாரிகள் நேரில் அழைத்து விசாரித்து எனக்கு நீதி வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

கார்த்திகேயன்.

இவ்வாறு வசந்தியின் கணவர் கார்த்திகேயன் டி.ஜி.பிக்கு இமெயிலில் அனுப்பியுள்ள புகாரில்  கூறியுள்ளார்.

இதையும் படிங்க.!