chennireporters.com

தரமில்லாத சாலை கல்லா கட்டிய கான்ட்ராக்டர் தத்தளிக்கும் திருத்தணி பொது மக்கள்.

திருத்தணியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சாலை பழுதடைந்துள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் பை-பாஸ் சாலை செல்வதற்கு முன்பு ஏரிக்கரை தெரு, ரேஷன் கடை ஆகிய பகுதியில் மலைகளில் இருந்து வரும் மழை தண்ணீர் வடிகால்வாய் மற்றும் புதிய கால்வாய் நெடுஞ்சாலை துறை சார்பில் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

இந்த பணியுடன் ரூ 1.50 கோடி மதிப்பீட்டில் சாலையும் அமைக்கப்பட்டது,
இந்த பணி முடிந்து  மக்கள் பயன்பாட்டிற்குள் வந்தது.  பணி முடிந்து மூன்று
மாதத்திற்குள் கால்வாய் மற்றும்  சேதமடைந்து விட்டது.  இதனால் சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

சென்னை- திருப்பதி போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய அதிவிரைவு கனரக வாகனங்கள், பேருந்துகள், இந்த பள்ளத்தில்  இறங்கி செல்லக்கூடிய சூழ்நிலை  ஏற்பட்டுள்ளது.  இதனால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தரம் இல்லாத சாலை மற்றும் கால்வாய் பணியை எடுத்த  ஒப்பந்ததாரர் தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
மேலும் இந்தப் பகுதி தி.மு.க பெண் கவுன்சிலரின் கணவர் இந்த சாலை  போடப்பட்ட பகுதியில் குடிதண்ணீர் பைப் லைன் எடுத்துச் சென்றுள்ளார். அதன் காரணமாக குடிதண்ணீர் பைப் லைன் உடைந்து, சாலையை மேலும் சேதமாக்கி மெகா பள்ளம் உருவாகியுள்ளதாக,  எதிர் கட்சியினர்  குற்றம் சாட்டுகின்றனர்,

மொத்தத்தில் மக்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளாமல் சாலையில் மிகப்பெரிய பள்ளம் உருவாகி பல நாட்கள் ஆகியும் சரி செய்ய அதிகாரிகள் முன் வரவில்லை.  பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் கற்கள் வட்டமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த  பள்ளத்தை சரி செய்து தரமான சாலைகள் மற்றும் கால்வாய்கள் அமைக்க தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!