chennireporters.com

காங்கிரஸ் சார்பில் அரசமைப்பு சட்ட நாள் கருத்தரங்கம்.

தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் அரசமைப்பு சட்ட நாள் கருத்தரங்கம் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி, ஊடகப் பிரிவு தலைவர் வழக்கறிஞர் கோபண்ணா,மாநில பொதுச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, எம் எம். டி. ஏ. கோபி, தளபதி பாஸ்கர், மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

இந்த விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு தலைவர் K. சந்திரமோகன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு நவாஸ், அருணாச்சலம், கணேசமூர்த்தி, ஆரோக்கியதாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் மாவட்ட தலைவர்கள் ஏ. ஜி சிதம்பரம், நாகராஜன், அடையாறு துறை, டில்லி பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

அரசமைப்பு சட்டம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி கருத்துரை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் இமாலயா கே அருண் பிரசாத், ஆர் சசிகுமார், அசோகன் காமராஜ் போத்திராஜ் ஆசிப், நரேஷ் குமார் லெனின் ராஜேஷ் ராஜேஷ் ராஜன், மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து இறுதியில் தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மூத்த வழக்கறிஞர் முத்தழகன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க.!