திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் தவிடு, புண்ணாக்கு விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்கிற குட்டி என்பவர் செந்தில்குமாரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஓட்டுநராக பணியாற்றி பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு வெங்கடேசனை பணியில் இருந்து நீக்கியுள்ளார்.
கொலையில் ஈடுபட்டவர்கள் வெறித்தனமாக வெட்டியதால் அந்த தெரு முழுவதும் கொலை செய்யப்பட்டவர்களின் கை, கால்கள் மற்றும் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அப்போது கொலைக்கு பயன்படுத்திய கத்தியை தொட்டம்பட்டி என்ற இடத்தில் மறைத்து வைத்துள்ளதாக கூறியதை அடுத்து செல்லமுத்துவை போலீசார் அழைத்து சென்ற போது தப்பி ஒட முயற்சித்தார். அப்போது அவர் கீழே விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கோவை, திருப்பூர் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.