chennireporters.com

தமிழ்நாடு புதுவையில் கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்திவைப்பு. உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

Chennai_High_Court

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும்

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்ற வளாகங்களிலும்
வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் முன் அனுமதி பெறாமல் நுழைய தடை விதிக்க
ப்படுகிறது.

தேவையின்றி நீதிபதிகள் நீதித்துறை ஊழியர்கள் நீதிமன்ற கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

அதுவரை கீழமை நீதிமன்ற பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகிறது.

ரிமாண்ட் உத்தரவு தொடர்பான பணிகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் காணொளி வாயிலாக வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் கடந்த ஞாயிற்று கிழமை காலமானார்.

இந்த சூழலில் மேற்கண்ட அறிவிப்பை உயர்நீதிமன்ற பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க.!