chennireporters.com

அறுபது வயதில் அடியெடுத்து வைக்கும் சின்னக்குயில் சித்ரா பிறந்த தினம் இன்று.

தமிழக திரை உலகில் அழியாப்புகழுடன் திகழ்பவர் பின்னணிப்பாடகி சின்னக்குயில் சித்ரா அவர்கள் பிறந்த தினம் இன்று.  ஜூலை 27, இன்று பிறந்தநாள் காணும் பிரபல பின்னணி பாடகி ‘சின்னக்குயில்’ K.S.சித்ரா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

கே. எஸ். சித்ரா எனப் பொதுவாக அழைக்கப்படும் கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா (Krishnan Nair Shantakumari Chithra,  கேரளாவில் 1963 ஜூலை 27ம் தேதி பிறந்தார். இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி இவர்  மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமிய, வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார்.

இவர் ஆறு தடவைகள் இந்தியத் தேசிய திரைப்பட விருதுகளையும், ஆறு தடவைகள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

தென்னிந்தியர்களிடையே “இசைக்குயில்” எனவும் “சின்னக்குயில்” சித்ரா எனவும் பிரபலமாக அழைக்கப்படுகிறார். ஜனவரி 2021 இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க.!