chennireporters.com

படப்பை குணா என்கவுன்டரிலிருந்த தப்பிக்க இன்ஸ்பெக்டர்கள் காரணமா ?

படப்பை குணா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் படப்பை குணா மற்றும் சில ரவுடிகளுக்கு உதவி செய்ததாக வந்த புகாரில் மூன்று காவல் இன்ஸ்பெக்டர்கள் வடக்கு மண்டலத்திலி ருந்து தெற்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தொழிற்சாலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு தேடப்படும் குற்றவாளியான பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு இன்ஸ்பெக்டர்கள் சிலர் உதவி செய்வதாக புகார்கள் வந்தன.

இதுகுறித்த விசாரணை நடத்திய டி.ஜி.பி ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, ஸ்ரீபெரும்புதூர் ஆய்வாளர் ராஜாங்கம் மற்றும் மணிமங்கலம் ஆய்வாளர் பாலாஜி ஆகிய மூன்று காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவர்களை வடக்கு மண்டலத்தில் இருந்து தெற்கு மண்டலத்திற்கு பணியிடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை மேற் கொண்டுள்ளார்.இவர்களுக்கு உதவிய மற்றவர் காவலர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதவிர 40 போலீஸ்காரர்களையும் டிஜிபி பணிமாற்றம் செய்துள்ளார் மேலே குறிப்பிட்டுள்ள இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மகேஸ்வரி பாலாஜி ஆகியோருக்கு அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும்.

டைல்ஸ் கம்பி சிமெண்ட் போன்ற முக்கிய பொருட்களை படப்பை குணா வாங்கித் தந்ததாக டிஜிபிக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதே போல இந்த மூன்று பேருக்கும் படப்பை குணா லட்சக்கணக்கான வில் பணமும் தங்க நகைகளும் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

படப்பை குணா தொடர்பாக எந்த புகார்கள் வந்தாலும் இவர்கள் உடனடியாக படப்பை குணாவுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் சொல்லி விடுவார்களாம்.

அதனால் புகார் அளித்தவர்களை படப்பை குணாவின் ஆட்கள் நேரடியாகச் சென்று புகார் கொடுத்தவரை மிரட்டி புகாரை வாபஸ் வாங்க வைத்து விடுவார்களாம்.

இதற்கு பலனாக படப்பை குணா மேற்கண்ட இன்ஸ்பெக்டருக்கு லட்சக்கணக்கில் பணமும் தங்க நகைகளும் விலை உயர்ந்த செல்போன்களையும் வாங்கித் தந்ததாக கூறப்படுகிறது.

ஏ.டி.எஸ்.பி வெள்ளைத்துரை போட்டு வைத்த ஸ்கெட்ச்சில் குணா தப்பியதற்கு இன்ஸ்பெக்டர்கள் தான் காரணம் என்று வெள்ளைதுரை தனியாக டிஜிபிக்கு ஒரு புகார் அளித்து இருக்கிறாராம்.

ஏ.டி.எஸ்.பி வெள்ளைத்துரை

இதனால் ரவுடி குணாவுடன் தொடர்பு வைத்திருக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் லிஸ்டை உளவுத்துறை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.

குணா சிக்குவாரா இல்லை பதுங்குவாரா என்பது போலீசாரின் நடவடிக்கைக்கு பிறகு தான் தெரியவரும்.

பணிமாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் களின் செல்போனை ஆய்வு செய்தால் படப்பை குணா உடன் பேசிய உரையாடல்களை எடுத்து விடலாம் என்கின்றனர்.

சில நேர்மையான போலீஸ் அதிகாரிகள் அரசுக்கு எதிராக செயல்படுகின்ற ரவுடிகளை காப்பாற்றும் இதுபோன்ற காக்கி சட்டை அணிந்த கருப்பு ஓநாய்களை பணி மாற்றம் செய்யாமல்

அவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்கின்றனர் சில நேர்மையான அதிகாரிகள்.

இதையும் படிங்க.!