chennireporters.com

#T12 Poonamallee Police போலீஸ் கமிஷ்னர் சங்கரை ஏமாற்றிய பூந்தமல்லி ஏ.சி, ஜவகர்! கொடி கட்டி பறக்கும் விபச்சாரம் , 3 நம்பர் லாட்டரியும்.

பூந்தமல்லி மற்றும் குமணன்சாவடி குன்றத்தூர் காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பான மூணு நம்பர் லாட்டரி விபச்சாரம் தொழில் நடந்து வருகிறது இதுகுறித்து செய்தி வெளியிட்டும் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பூந்தமல்லி குன்றத்தூர் மாங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை உடனடியாக மாற்றி சட்டம்ம் ஒழுங்கை காப்பாற்றி கழகத்திற்கு நல்ல பெயரை வாங்கித் தர வேண்டும் என்று பூந்தமல்லி நகர திமுக உடன் பிறப்புகள் சிலர் தமிழக முதல்வருக்கும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் புகார் அனுப்பியுள்ளனர். எனவே டிஜிபி சங்கர் ஜீவால் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்கின்றனர் பூந்தமல்லி திமுகவினர்.

டிஜிபி சங்கர் ஜுவால்.

பூந்தமல்லி யில் நான்கு இடங்களில் மூன்று நம்பர் லாட்டரி வியாபாரம் நடந்து வருவதாகவும் குன்றத்தூர் மாங்காடு காட்டுப்பாக்கம் போன்ற பகுதிகளில் பாலியல் விபச்சாரம் நடந்து வருவதாகவும் நாம் நமது இணையதளத்தில் (www.chennaireporters.com)செய்தி வெளியிட்டிருந்தோம் https://www.chennaireporters.com/news/poonamallee-flag-flying-cops-lose-dignity-for-3-number-lottery-scam-will-the-commissioner-take-action/ 

#poonamallee கொடி கட்டி பறக்கும் 3 நம்பர் லாட்டரி மாமுலுக்காக மானத்தை இழக்கும் போலிசார். நடவடிக்கை எடுப்பாரா கமிஷனர்.

அது தொடர்பாக பூந்தமல்லி போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தோம்.  இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி பூந்தமல்லி போலீசார் 3 நம்பர் லாட்டரி வியாபாரத்தில் ஈடுபட்ட பாரிவாக்கம் மாரியம்மன் கோவிலை சேர்ந்த பழனி மற்றும் சந்திரசேகர் என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப் ஐ ஆரில் உள்ள தகவல்களை வாசகர்களுக்கு நாம் அப்படியே வழங்குகிறோம்.

கடந்த 23-ம் தேதி மதியம் 12 மணிக்குசரவணன் தலைமை காவலர்T-12 பூந்தமல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளராகிய எனக்கு புலனாளி பூந்தமல்லி பஸ் டிப்போ அருகில் உள்ள காலி இடத்தில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு நடத்தும் பழனி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் அந்த இடத்தில் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக பெற்ற தகவலின் பெயரில்  பூந்தமல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சபரிநாதன் ஆகிய நான்  சரவணன் தலைமை காவலர் மற்றும்  ராமச்சந்திரன் இரண்டாம் நிலை காவலர் ஆகியோர் சகீதம் மதியம் 12:30 மணிக்கு பூந்தமல்லி பஸ் டிப்போ அருகில் உள்ள காலி இடத்திற்கு தணிக்கை செய்ய சென்றபோது அங்கு அமர்ந்திருந்தவர்கள் எங்களை கண்டதும் தப்பி ஓடியவர்களில் பாரிவாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைவை சேர்ந்த பழனியும் சந்திரசேகர் என்பவரும் ஆவர்.

இந்நிலையில் அந்த இடத்தில் தணிக்கை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சம்மர் பம்பர் லாட்டரி ஆறு நம்பர் மூன்று நம்பர் எழுதப்பட்ட மஞ்சள் நிற துண்டு சீட்டுகள் 16 துண்டு சீட்டுகள் கோர்வையாக கொண்ட மஞ்சள் நிற நோட்டுப் புத்தகம் ஒன்று மற்றும் சாம்சங் செல் போன் ஒன்று மைக்ரோமேக்ஸ் செல்போன் ஒன்று கேஷியோ கால்குலேட்டர் இரண்டு மற்றும் பத்து ரூபாய் நோட்டுகள் 50,  20 ரூபாய் நோட்டுகள் 96,  50 ரூபாய் நோட்டுகள் 24,  100 ரூபாய் நோட்டுகள் 58, 500 ரூபாய் நோட்டுகள் 21 என மொத்த தொகை 25 ஆயிரத்து 520 ரூபாய் ஆகியவற்றை கைப்பற்றுவதற்காக அங்கிருந்த சாட்சிகள் கைலாஷ்,  குமார், ரவி ஆகியோர் சாட்சியாக இருக்க அவர்கள் மறுத்துவிட்டபடியால் என்னுடைய போலீஸ் பார்ட்டியில்  இருந்த தலைமைக்காவலர் சரவணன் மற்றும் ராமச்சந்திரன் காவலர் ஆகியோர் முன்னிலையில் கைப்பற்றுதல் மகஜர் தயார் செய்து கைப்பற்றப்பட்டு வழக்கு சொத்துக்களுடன் நிலையம் வந்து தலைமறைவு எதிரிகள் பழனி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மீது T12 Poonamallee Police பூந்தமல்லி காவல் நிலைய குற்ற எண் 141\ 202  சட்டப்பிரிவு 7 (3) lottery regulation act 1998 வழக்கு பதிவு செய்யப்பட்டு இதன் மூலம் தகவல் அறிக்கையின் அசலை கணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 ல் பூந்தமல்லி அவர்களுக்கும் மற்ற நகல்களை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பூந்தமல்லியில் உள்ள உடன்பிறப்புகள் சிண்டிகேட் அமைத்து பாரிவக்கம் மாரியம்மன் கோவிலை சேர்ந்த பழனி, சந்திரசேகர், குட்டி ,இளைஞரணியை சேர்ந்த  செந்தில்குமார் மாங்காடு சீனிவாசன் பூந்தமல்லி திமுக சேர்மன் காஞ்சனாவின் கணவர் சுதாகர் என அனைவரும் கூட்டாக சேர்ந்து  இந்த சட்டத்திற்கு புறம்பான தொழிலை செய்து வருகின்றனர்.

பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் ஜவகர்.

அதாவது பூந்தமல்லி நகர சுற்றியுள்ள பகுதிகளில் குமணன் சாவடி பூஞ்சோலை தெரு பி.வெல் மருத்துவமனை எதிரில் உள்ள கவரை தெரு,  பூந்தமல்லி பைபாஸ் சாலையில் உள்ள பழைய பாலமுருகன் சினிமா தியேட்டர்,  பூந்தமல்லி பஸ் டிப்போ அருகில் என நான்கு இடங்களில் இந்த வியாபாரம் நடந்து  வருகிறது.  சட்டத்திற்கு புறம்பாக  நடந்து வரும் இந்த தொழிலுக்கு இடம் வழங்கிய பாலமுருகன் சினிமா தியேட்டர் உரிமையாளர் பாபு மீது இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போலீசார் போட்ட  கண் துடைப்பு வழக்கில் பூந்தமல்லி பஸ் டிப்போ அருகில் நடக்கும் மூன்று சீட்டு லாட்டரி நடத்தும் இடத்தில் மட்டும் சோதனை நடத்தி வழக்கு போட்டதாக சொல்லும் போலீசார் மீது உள்ள இடங்களில் எந்தவித ரைடோ சோதனையோ நடத்தவில்லை  நடவடிக்கையும் எடுக்கவில்லை பாரிவாக்கம் பழனியும், சந்திரசேகரும் தலைமறைவான குற்றவாளிகள் என்று கூறியுள்ளனர்.  ஆனால் அவர்கள் அன்றைய தினம் பூந்தமல்லி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த விசாரணை அதிகாரி சபரிநாதனுக்கும்  சோதனைக்கு சென்றதாக சொல்லப்படும் தலைமைக்காவலர் சரவணன் மற்றும் ராமச்சந்திரன்  ஆகிய இரண்டு காவலர்களுக்கும் கணிசமான தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.  கைபற்றப்பட்ட பணத்தின் முழு கணக்கையும்  சபரிநாதன் காட்டவில்லை என்கின்றனர் பழனி தரப்பினர்.

புலனாய்வு புலி என்று மாறு தட்டிக் கொள்ளும் தமிழக போலீசார் ஏவிகே லாட்டரி என்ற பெயரில் நடந்து வரும் இந்த மூன்று சீட்டு லாட்டரிக்கு உண்மையான உரிமையாளர் யார் அவர் எங்கு இருக்கிறார்  ஏன் இதுவரை அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர் உபிக்கள் சிலர்.

திமுக பூந்தமல்லி நகராட்சி சேர்மன் கணவர் சுதாகர்.

ரெட்டில்ஸ் பாடியநல்லூர் பார்த்திபன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இருவரையும் டெல்லிக்குச் சென்று அங்கிருந்து பிடித்து வந்து ரெட்ஹில்ஸில் வைத்து பார்த்திபன் கொலை செய்யப்பட்ட அதே நாளில் முத்து சரவணன் மற்றும் சண்டே சதிஷ்   இருவரையும் என் கவுண்டர் செய்ய தெரிந்த ஏசி ஜவகருக்கு பக்கத்தில் உள்ள பழனி சந்திரசேகர் செந்தில் குமார் சுதாகர் ஆகியோரை பிடிக்க தெரியாமல் போனதுக்கான காரணம் என்ன என்கின்றனர் பூந்தமல்லியை சேர்ந்த சில உடன்பிறப்புகள்.

பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் ஜவகர்.

ட்டம் ஒழுங்கை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய சுயலாபத்துக்காக விபச்சாரம் கூட செய்ய சொல்லி பணம் வாங்கிக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் ஒன்றுமே தெரியாததைப் போல குருடனை போலவும் செவிடனை போலவும் பூந்தமல்லி போலீசாரும் காவல்துறை உயரதிகாரிகளும் நடந்து கொள்வது அவமானத்தின் உச்சம் காக்கிச்சட்டையினர் மானத்தை இழப்பது வெட்கக்கேடானது.

இளிச்சவாயன் தலைமையில் மிளகாய் அரைப்பதும் ஏமாந்த ஆட்டோ டிரைவர்கள் கூலித் தொழிலாளிகள் மீது வழக்கு போடும் போலீஸ் மூணு நம்பர் லாட்டரி நடத்தும் இடத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் பணத்தையும் பத்திரிகையாளர்களுக்கு செய்தியும் தரவில்லை ஃபோட்டோக்களையும் வெளியிடவில்லை. மேலும் இந்த செய்தி குறித்து பூந்தமல்லி பகுதியில் உள்ள பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றும் யோக்கிய சிகாமணிகள் யாரும் எழுதவில்லை என்பது கூடுதல் தகவல். போலீசார் பத்திரிகையாளர்களுக்கு இந்த செய்தியை ஏன் தரவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி.

பூந்தமல்லியில் உள்ள திமுக சேர்மன் காஞ்சனாவின் கணவர் சுதாகரின் எதிரணியினர் போலீசார் கழக ஆட்சியில் இப்படி மாமூலுக்காகவும் திருட்டு பசங்க போடும் எலும்புத்துண்டுக்காகவும்  தன்மானத்தை இழந்து ஏங்கிக் கிடப்பது அவமானத்தின் உச்சம் இது தொடர்பாக முதல்வருக்கும் கழகத்தின் இளைஞரணி செயலாளருக்கும் புகார் கடிதம் எழுதி இருப்பதாக சொல்கின்றனர்.  

இந்த செய்தி குறித்து போலீஸ் அதிகாரிகள்  எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தால் அதை நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

செய்தி வெளியான சில மணி நேரங்களில் நம்மை தொடர்பு கொண்ட பூந்தமல்லி ஏசி ஜவகர் எங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் நீங்கள் பொய்யான குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறீர்கள். நான் உங்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பேன் என்று ஒருமையில் மிரட்டும் வகையில் பேசினார் .பதிலுக்கு நாமும் ஒருமையில் பேசக்கூடாது நீங்கள் சட்டரீதியாக அணுகுங்கள் நாங்கள் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று பதில் அளித்தோம்.

நீங்கள் தவறாக செய்தியை பதிவிட்டு இருக்கிறீர்கள் சம்மந்தப்பட்ட விஷயத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் அந்த செய்தியை உங்களிடத்தில் நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பத்திரிகையாளர்களுக்கு செய்தி குறிப்பாக தரவேண்டிய அவசியமும் இல்லை என்று சொன்னார். ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டதில் போலீஸ் தரப்பில் விளக்கம் அளித்தால் அதை நாங்கள் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

இந்நிலையில் ஏசி ஜவகர் நீங்கள் 3 சீட்டு லாட்டரி நடத்துபவர்களிடம்  முப்பது லட்சம் ரூபாய் கேட்டதாக புதிய தகவலையும் குற்றச்சாட்டையும் வைத்தார். ஆதாரம் இருந்தால் நீங்கள் நடவடிக்கை எடுங்கள் என்று நமது தரப்பில் தெரிவித்தோம். ஏசி ஜவகர் போலியாக ஒரு நபரை தயார்படுத்தி நம் மீது பொய்யாக ஒரு வழக்கை புனைந்து கைது செய்யும் நோக்கத்தில் இருக்கிறார் ஜவகர் என்பது அவர் பேச்சில் தெரிந்தது அப்படித்தான் அவர் சொன்னார் நாம் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!