கண்ணகி நகர் மாணவர்கள் இஸ்ரோ பயணம் ;
சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சிக்காக *கண்ணகி நகர் மாணவர்கள் 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் .
75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்கைக்கோள் ஒன்றை இஸ்ரோ செலுத்த திட்டமிட்டுள்ளது..
அதற்காக தமிழ்நாட்டில் உள்ள 26 மாவட்டங்களைச் சார்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பல போட்டிகள் நடத்தப்பட்டது. இப் போட்டிகளில் 75 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.
அவர்களின் எட்டு பேர் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கண்ணகி நகர் பகுதியை சார்ந்தவர்கள்.
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ.ஆ. ப அவர்களின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் டாக்டர்.ஆ ப ஜெ அப்துல்கலாம் மக்கள் நலச் சங்கத்தின் மாலை நேர பயிற்சி வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் இணையம் வழியில் பல்வேறு தலைப்புகளில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் விஞ்ஞானிகள் திரு. சிவதாணுபிள்ளை, திரு.ஆர்.எம். வாசகம்,திரு.ஆர்.ஆர். இளங்கோவன், திரு.ஆர். வெங்கடேசன் ஆகியோர் தமிழ் வழியில் மாணவர்களுக்கு இரண்டு மாதங்களாக பயிற்சிகள் வழங்கினர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திற்கான நேரடி பயிற்சி வகுப்புகள் வருகின்ற 2.11.22 முதல் 5.11.22 வரை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ நிலையங்களில் வழங்கப்பட உள்ளது.
அதற்காக இன்று காலை கண்ணகி நகர் பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 8 மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாகிகளும், அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகளும் வழி அனுப்பி வைத்தார்கள்.
இப்பயிற்சியை முடித்து திரும்பியதும் செயற்கைக்கோள் ஏவப்படும் குறிப்பிட்ட நாளில் இஸ்ரோவின் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி செயற்கைக்கோள் ஏவுதலத்திற்கு 75 மாணவர்களும் செல்ல உள்ளார்கள்.
2021 ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஆ. ப. ஜெ .அப்துல் கலாம் அவர்களின் நினைவாக 100 மிகச் சிறிய செயற்கைக்கோள் செலுத்திய குழுவில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ.ஆ. ப அவர்களின் மூலம் கண்ணகி நகரில் மாலை நேர பயிற்சி வகுப்பில் பயின்று வந்த 31 மாணவர்கள் கலந்து கொண்டு கின்னஸ் ரெக்கார்ட், வேர்ல்ட் புக் ஆப் ரெகார்ட், ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் போன்றவற்றில் இடம் பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.