தமிழக காங்கிரஸ் மாநில தலைவராக செல்வப்பெருந்தகை தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன் எப்படி என்றும் கே.எஸ் அழகிரி கழற்றிவிடப்பட்ட பின்னணி குறித்தும் காங்கிரஸ் தொண்டர்களும் திமுகவினரும் சமூக வலைதளங்களில் பல சம்பவங்களை குறிப்பிட்டு
பதிவுகளை வைரலாக்கி வருகின்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் செல்வப்பெருந்தகை .
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம், கடந்த 2022 ஜனவரி மாதமே முடிந்துபோனது. அப்போதிருந்தே புதிய தலைவரை தேடும் படலம் கட்சியில் தீவிரமாக நடந்து வந்தது. ஒவ்வொரு முறை”யும் தலைவர் நியமனம் தொடர்பான விவாதம் டெல்லியில் நடக்கும்போது எதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டி கழித்து வந்தார் அழகிரி. ஆனால் இந்த முறை அழகிரி அவமானப்பட்டது தான் மிச்சம். அது மட்டுமல்லாமல் கட்சி பொறுப்புகள் வழங்கியதில் பெரிய அளவில் கல்லா கட்டி காசு பார்த்தார் அழகிரி. இது கோல குற்றச்சாட்டுகளை டெல்லிக்கு பல புகார்கள் அனுப்பபட்டது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
டெல்லி தலைமை அழகிரிக்கு மாற்றாக யாரை தலைவராக கொண்டு வருவது என்பதில் ஏகப்பட்ட சிக்கல் இருந்து வந்தது . கட்சியில், பெரும்பாலான சீனியர்களும் தலைவர் பதவிக்கு குறிவைத்தனர். சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரமும் தலைவராக தீவிரமாக முயற்சித்தார். இவருக்கு தான் வாய்ப்பு இல்லை என்றால் டாக்டர் செல்லக்குமாருக்கு வாய்ப்பு என்றும் பேச்சு எழுந்தது. இந்தச் சூழலில்தான், கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவிடம் நெருக்கம் காட்டி வந்தார் செல்வப்பெருந்தகை.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்.
செல்வப்பெருந்தகைக்கு, சட்டமன்ற கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்ட போதே சர்ச்சை வெடித்தது. ‘பாரம்பரிய காங்கிரஸ்காரர்கள் எவ்வளவோ பேர் இருக்கும்போது, அவரை ஏன் சட்டமன்ற கட்சி தலைவராக்க வேண்டும் என தென்மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் கடுமையாக எதிர்ப்பு காட்டினர். அதைப்பற்றியெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல், தலைவர் பதவிக்கு குறிவைத்து மல்லிகார்ஜுன கார்க்கே மூலமாக காய் நகர்த்தினார் செல்வப்பெருந்தகை. கடந்தமாதம் நடந்த டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரையில் நானே பதவில் தொடர்கிறேன்’ எனச் சொல்லிப் பார்த்தார் அழகிரி. ஆனால், ‘தலைவர் மாற்றம் உறுதியானது. அது தேர்தலுக்குள் நடக்கும்’ என கண்டிப்புடன் சொல்லி அனுப்பிவிட்டார் மல்லிகார்ஜுன கார்க்கே.
நீக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி.
தலைவர் பதவிக்கு, பலபேர் முயற்ச்சி செய்தனர். ஆனால் கார்கேவின் ஆதரவுடன் தலைவர் பதவியைப் பிடித்துவிட்டார் செல்வப்பெருந்தகை. இந்த மாற்றத்தில், அழகிரிக்கும் தி.மு.க-வுக்கும் இடையேயான மனக்கசப்பும் ஒரு காரணம். பொதுவெளியில், ‘நாங்கள் 15 சீட்டுகள் எதிர்பார்க்கிறோம்’ என அழகிரி போட்டுடைத்ததை அறிவாலயம் விரும்பவில்லை. டெல்லியில், சொல்ல வேண்டிய இடத்தில் தங்கள் மன வருத்தத்தை சொல்லிவிட்டனர். தலைவர் பொறுப்பு கிடைக்காதவர்கள், செல்வப்பெருந்தகைக்கு தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டதை விரும்பாதவர்கள் என ஒரு பட்டாளமே சத்தியமூர்த்தி பவனுக்குள் இருக்கிறது. அவர்களையெல்லாம் சமாளித்து கட்சி நடத்துவதே சவாலான காரியம்தான்” என்கின்றனர் கதர் சட்டைக்காரர்கள்.
ராகுல் காந்தியுடன் செல்வப்பெருந்தகை.
தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். தன் விருப்பத்தையும் டெல்லிக்கு அவர் தெரியப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள் சீனியர்கள் சிலர். இதற்கிடையே, சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி, கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ராஜேஸ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
“சீனியரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருக்கும்போது, ராஜேஸ்குமாரை ஏன் தலைவராக்க வேண்டும்…”, என இப்போதே முணுமுணுப்புகள் எழத் தொடங்கிவிட்டன. தேர்தல் நெருங்கும் வேளையில், புதிய தலைவர் நியமனமும், சட்டமன்ற கட்சித் தலைவர் மாற்றமும் காங்கிரஸ் கட்சிக்குள் ஒருவித சலசலப்பை உண்டாக்கி பல மூத்த கதர் சட்டைகளை கதறவிட்டுள்ளார் செல்வப்பெருந்தகை. இனிமேல் தமிழுநாட்டில் நமது ”கை” ஓங்கும் என்கிறார்கள் கதர்சட்டைக்காரர்கள்.