chennireporters.com

செங்குருதி செய்த தீயாகம்! தோழர் ஜீவா எனும் மகத்துவம்…

செங்குருதி செய்த தியாகம் , பாட்டாளிகளின் தோழன் ஜீவா எனும் மகத்துவம் வாழ்ந்த தமிழ்நாடு. சிவப்பு சட்டைகாரர்களின் அடையாளமாக வாழ்ந்த ப. ஜீவாவின் 60 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.  அவரது நினைவு நாளில் பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஒரு முறை மதுரையில் கட்சிக்கூட்டத்தில் பேசிவிட்டு அதிகாலையில் கோவை வருகிறார் ஜீவா அவரை அழைத்துச் செல்வதற்கு வரவேண்டிய தோழர்கள் இன்னும் வரவில்லை. புகைவண்டி நிலையத்தின் இருக்கையில் படுத்துத் தூங்கிவிடுகிறார்.

தோழர்கள் வந்து எழுப்புகிறார்கள்..”பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம்” என்கிறார் ஜீவா”இங்கயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்””சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல”தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டுவந்த மூட்டையை எடுத்துக்கொண்டு ஜீவா கிளம்புகிறார்..

“கொடுங்க தோழர், அதை நான் கொண்டாரேன்” என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர் ஒருவர் அப்போதுதான் அதில்  ரூபாய் நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் அடங்கிய பணமூட்டையென்பது தோழருக்குத் தெரிகிறது. 

“இது என்னங்க ஜீவா..””மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும், பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க” என்கிறார் ஜீவா”மூட்டை நெறையா பணத்தை வச்சுக்கிட்டா பசியோட இருந்தீங்க.. இதுலருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாமே ஜீவா” என்று கேட்டனர் தோழர்கள்.

“அதெப்படி தோழர் கட்சிக்குக் கொடுத்த நன்கொடைல நான் இட்லி வாங்கித் திங்க முடியும், அது தப்பில்லையா?” என்றார் ஜீவா..ஆம் அந்த மாமனிதன் தோழர் ஜீவா அவர்களின் 60-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

தேசிய, திராவிட, பொதுவுடைமை அரசியலின்நல்லியல்புகள் அனைத்தையும் ஈர்த்துபேரு எடுத்த பெருமகன் ஜீவா! இவர் இல்லாமல் போயிருந்தால் பாரதி தெய்வீகக் கவியாகக்
குறுக்கப்பட்டிருப்பார்;கம்பரின் தீந்தமிழ் நாத்திகர்களுக்கு அந்நியமாகியிருக்கும்.
படத்தில், கே. பாலதண்டயுதம், பி. ராம்மூர்த்தி ஜீவாவுடன்.

இதையும் படிங்க.!