பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்த போதை தாசில்தார் பற்றி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகமே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தாசில்தாராக இருப்பவர் ராஜரத்தினம், இவர் ஒரு பெண்ணுடன் ஓட்டல் அறையில் உல்லாசமாக இருப்பது போன்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர். திருமதி. ஆஷா அஜித் இ. ஆ. ப.,
சம்பந்தப்பட்ட உல்லாச வீடியோவை அரசு அதிகாரியான அவரே வாட்சப் செயலியில் ஸ்டேட்டசாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த வீடியோவை அவர் போதையில் இருந்த போது தெரியாத்தனமாக வைத்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த தாசில்தாரின் வாட்ஸ் ஆப் செயலியிலிருந்து டவுன் லோட் செய்து, வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட வீடியோவில் சிக்கிய அதிகாரிக்கு சிக்கல் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்பவர் என்பதால், அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகங்கை மாவட்ட உயர் அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர். ஆபாச வீடியோவை பொது இடத்தில் பலரும் பார்க்கும் படி பகிர்ந்த குற்றத்திற்காக தாசில்தார் ராஜரத்தினம் மீது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தானாக முன் வந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிக்காத நிலையில், இதுபோன்ற விவகாரங்களில் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் , சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று சமூக ஊடங்களில் சிலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். முன்னதாக இந்த அரசு அதிகாரி பணியாற்றிய இடங்களில் இது போன்ற பாலியல் புகார்களில் சிக்கியவர் என கூறப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பணியாற்றி வந்த போது, தாசில்தார் ராஜரத்தினம் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக எழுந்த புகாரில் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் சொல்லி வருகிறார்கள்.