chennireporters.com

வழக்கறிஞர் சங்க தேர்தல் சும்மா தான் சொல்றாங்களா? இல்லை தோராயமா தான் நடக்குமா?

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த தேர்தல் வரும் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என MHAA தேர்தல் அதிகாரிகளால் தோராயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு முடிவெடுப்பதைப்போலவே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல் அதிகாரிகள் முடிவெடுப்பதாக சொல்கின்றனர் அதிகாரிகள்.

பல  ஆண்டுகள் தேர்தல் களம் கண்ட சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இந்த முறை தான் உத்தேசமாக தோராயமாக தேர்தல் தேதியை அறிவித்துள்ளனர் இது உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாகும்.

வழக்கறிஞர்களை குழப்பி அதில் குளிர் காய நினைக்கிறார்கள்  தேர்தல் அதிகாரிகள் என்று  குற்றசாட்டை முன் வைக்கின்றனர் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் சிலர்.தெளிவான முடிவும் அறிவிப்பும் தேர்தல் அதிகாரிகள் வெளியிடாமல் இருப்பதற்கு காரணம் என்ன யார் அவர்களை தடுப்பது யாருக்காக இவர்கள் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள் என்று நெரியவில்லை என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.சென்னை உயர் நீதிமன்ற தேர்தல் தோராயமாகத்தான்  நடக்குமா ?
வாக்குப்பதிவும் தோராயமாக நடக்குமா? தோராயமாக தான் வாக்கு எண்ணிக்கையும்  நடக்குமா ? அதே வேளையில் தேர்தல் வெற்றி முடிவுகளும் தோராயமாகவே வெளியாகுமா என்ற கேள்வியும் வழக்கறிஞர்கள் மத்தியில் எழுகிறது.வரும்  டிசம்பர் மாதம்  8-ம் தேதி அன்று  தேர்தல்  நடைபெறும் என்று தோராயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலமாக உள்ளது. அதுவும் குறிப்பாக நீதிமன்ற வேலை நாட்கள் உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்ற சட்ட மொழிக்கு எதிராகவே அமைந்துள்ளது. தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கை.ஒட்டுமொத்த தேர்தல் அதிகாரிகளும் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக இருப்பதைப் போல எண்ணம் எழுகிறது வழக்கறிஞர்கள் மத்தியில் . இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிரதமர் மோடி சென்று பார்த்ததால் தான்  இந்திய ஆணி  வெற்றி வாய்ப்பை இழந்தது. அதைப் போல தான் MHAA  தேர்தலின் முடிவுகளும் இருக்கும் என்று சொல்லுகிறார்கள் வழக்கறிஞர்கள்.

இதையும் படிங்க.!