chennireporters.com

ஆயுதத்தை மௌனித்து அமைச்சரான தெலுங்கானாவின் இரும்பு பெண்மணி சீதாக்கா…

சத்தீஷ்கர் மாநிலத்தின் மலைப்பகுதியின் விளிம்பில் உள்ளது ஜெகன்னப்பேட்டை என்னும் கிராமத்தில் தனசாரி அனுசுயா சீதாக்கா  என்னும் இவர் ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி 1971-ம் ஆண்டு சம்மக்கா, சம்மையா தம்பதிக்கு இரண்டாவது மகளாக பிறந்தார்சீதாக்கா ஜெகன்னா பேட்டா கிராமத்தில் ஆதிவாசி கோயா பழங்குடி குடும்பத்தில் பிறந்தவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பு அனுசுயா நக்சலைட்டாக பணியாற்றி வந்தார் .1987 -ம் ஆண்டு தனது 14 வது வயதில் ஜனசக்தி நக்சல் குழுவில் சேர்ந்தார். இவருக்கு இந்த இயக்கத்தில் கிடைத்த ஏமாற்றத்தின் காரணமாக 11 வருட காலத்திற்குப் பிறகு இயக்கத்தில் இருந்து வெளியேறினார்.1997-ம் ஆண்டு பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் இவர் காவல் துறையில் சரணடைந்தார். பின்னர் படிப்பை  தொடர்ந்தார். வழக்கறிஞரானார் 2022-ல் சீதாக்கா தனது முனைவர் பட்ட ஆய்வினை உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பிரிவில் முடித்தார்

அனுசுயா 2020-ம் ஆண்டில் தெலுங்கானா சத்தீஸ்கர் எல்லைக்கு அருகில் உள்ள 400க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொது அடைப்பின் கொரோனா காலத்தின் போது உள்ளூர் மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அரிசி பருப்பு போன்ற வற்றை விநியோகித்தார்.  மக்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் முகமூடிகளை வினியோகித்தார். இவரது முயற்சிகள் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய ஆதரவை பெற்றன.என் சொந்த திருப்திக்காக எனது மக்களுக்கு எனது கடமையாக இதை செய்கிறேன் என்று அனுசுயா அப்போது கூறினார். ஆளும் அரசிடம் இருந்து எந்த ஆதரவும் இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை நன்கொடைகள் மற்றும் உதவும் எண்ணம் கொண்ட நபர்களின் ஆதரவின் காரணமாக என்னால் இதையெல்லாம் செய்ய முடிந்தது என அப்போது அவர் தெரிவித்தார்.தனசாரி அனுசுயா சீதாக்கா 2004 ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து முலுகு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு  2009-ம் ஆண்டு மீண்டும் முலுகு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் வீரய்யாவை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் 2014ம்  ஆண்டு தேர்தலில் பாரத் ராட்டின சமதி வேட்பாளர் அசுமிரா சந்துலாளிடம் தோல்வி அடைந்தார். 2017-ம் ஆண்டில் அனுசுயா தெலுங்கு தேசம் கட்சியை விட்டு வெளியேறி இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயலாளராகவும் பின்னர் சத்தீஸ்கர் மகளிர் காங்கிரஸின் மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் 2018-ம் மற்றும் 2023 ஆம் ஆண்டு முலுகு தொகுதிக்கான சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். டிசம்பர் 7 அன்று தெலுங்கானாவின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.  தனசாரி அனுசுயா சீதாக்கா சோனியா காந்தியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் ராகுல் காந்தியின் வலது கரமாகவும் தெலுங்கானா காங்கிரஸில் பணியாற்றினார். இவர் தெலுங்கானாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுகிறார். தான் பிறந்த சமூகத்தில் படிப்பு தான் மிக சிறந்த ஆயுதம் என கருதி தன் கையில் எடுத்த துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு சட்டப் புத்தகத்தை கையில் எடுத்து வெற்றி பெற்று இன்று தெலுங்கானா மாநில அமைச்சரவையில் அமைச்சராக மகுடம் சூடி இருக்கிறார்.தனசாரி அனுசுயா சீதாக்கா. இவர் பதவி பிரமாணம் எடுத்தபோது தனசாரி அனுசுயா சீதாக்கா எனும் நான் என சொன்னபோது விண்ணை அதிர்ந்த கரகோஷங்களும் விசில் சத்தமும் அடங்குவதற்கு சில மணி நேரங்கள் ஆனது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தன்னை மறந்து மெய் சிலிர்த்து சிரித்து மகிழ்ந்தார். போராளி பெண்ணாக ஆயுதம் தூக்கிய தனசாரி அனுசுயா சீதாக்காவுக்கு அமைச்சர் பதவி எளிதில் கிடைத்ததில்லை அது அவரது உழைப்பிற்காக கிடைத்த உன்னத பதவி.

 

 

 

இதையும் படிங்க.!