chennireporters.com

அனாதையான அத்வானி. நடுத்தெருவில் நிற்க வைத்த ஆர்.எஸ்.எஸ்.

கடந்த இரண்டு நாட்களாக எல்.கே. அத்வனி பற்றி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். எப்படி “ஒருவனை” பயன்படுத்திக் கொண்டு காரியம் முடிந்தவுடன் தூக்கி எறியும்?  என்பதற்கு இவர் தான் உதாரணம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எல்.கே. அத்வானி என்கிற லால் கிருஷ்ண அத்வானி பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் 1927-ம் ஆண்டு நவம்பர் 8 -ம் தேதி பிறந்தார். அத்வானி பாரதிய ஜனதா கட்சி நிறுவன தலைவர்களில் ஒருவர். ஆர்.எஸ்.எஸ்.சின் ஊழியர்.  இவர் இந்தியாவின் துனை பிரதமராகவும், உள்துறை அமைச்சரகவும் பதவி வகித்தவர்.

கடந்த 8 ம் தேதி தனது  96ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் அத்வானியை நேரில் சென்று வாழ்த்த ஒரு ஆள் கூட இல்லை. இந்தியாவில் பார்ப்பன – பாசிச பாஜக இரத்தம் சொட்ட சொட்ட முன்னெடுக்கும் அனைத்து மதக் கலவரங்களுக்கும் “வன்முறை விதையை” ஊன்றியவர் இவர் தான்.

அத்வானியின் ரத யாத்திரையில் உதவியாளராக வந்தவரை  வளர்த்து விட்ட சிஷ்ய பிள்ளை தான் மோடி. அத்வானியால் 140 சீட்டுகளுக்கு மேல் போக முடியாது என்பதை உணர்ந்த ஆர்.எஸ்.எஸ். தனது “போட்டாஷாப்” பிரச்சாரத்தின் மூலம் மோடியை பிரதமர் ஆக்கியது.

அத்வானி உயிருடன் இருக்கும் போதே “நடை பிணம்” தான். “மதவெறி மூலம் மக்களைக் கொன்ற” அந்த நடை பிணத்தை கண்டு கொள்ள இன்று ஆளே இல்லை.  ஆனால், மக்களுக்காக வாழ்ந்த அம்பேத்கர் – பெரியார் – மார்க்ஸ் மூவரும். அவர்கள் மறைந்து ஆண்டுகள் பல ஆனாலும் இன்றும் அதே மக்களால் கொண்டாடப் படுகிறார்கள் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. 

ஆனால் முன்னாள் சபாநயகர் வெங்கையா நாயுடு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  ஆகியோர்  அத்வனியின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரித்து அவரது குடும்பத்தினருடன் பேசியுள்ளனர். இந்த செய்தி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். என்ற செய்தி அனைத்து வட மாநில இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!