chennireporters.com

நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய சட்ட முன் வடிவு இயற்றப்படும்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது சட்டசபை உரையில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன் வடிவு இயற்றப்படும் என்று தெரிவித்தார்.

16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது.

தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றதை தொடர்ந்து சட்ட சபை கூட்டப்பட்டது முதல்வர் மற்றும் புதிய எம்.எல்.ஏ.க்கள் அப்போது பதவிப் பிரமாணம் ஏற்றனர்.

இதனைத் தொடர்ந்து சட்டசபையின் புதிய சபாநாயகராக அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டனர் இதனைத் தொடர்ந்து சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றிய போது: திராவிடப் போர் வாள் முத்தமிழறிஞர் கலைஞர் கருணா நிதி மறைந்து மூன்று வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த கூட்டம் கூடியுள்ளது.

அவரது கொள்கைகள் இந்த அரசை வழிநடத்தும்.நமது ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதை இந்த அரசு பின்பற்றும்.

தமிழை இந்தியை அலுவல் மொழியாக்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான பல்வேறு உதவிகளை கேட்டு பெற மனு வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டின் நிதி நிலையில் தற்போதைய நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கையை ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்று கவர்னர் உரையில் தெரிவித்தார்.

இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மாநில நிதி நிலையில் விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படும்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்ட திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் இந்த அரசு நல்லது செய்யும்.சட்டசபையில் ஆளுநர் இவ்வாறு கூறினார்.

மேலும் நீட் தேர்வு ரத்து செய்ய அதற்கான சட்ட முன்வடிவை கொண்டுவந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.  திருநங்கைகளின்   வாழ்க்கையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேலைவாய்ப்பு பெறுவதற்கும் தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

பெரியார் காண விரும்பிய சுயமரியாதை சமூகமாகவும் உரிமை பெற்ற மக்களாகவும் எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும் தமிழ் நாட்டையும் மாற்றுவதற்கு இந்த அரசு உறுதி ஏற்றுள்ளது.

இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது சட்டசபை உரையில் தெரிவித்தார்.

இதையும் படிங்க.!