chennireporters.com

assam: அசாம் மாநிலத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு.

அசாம் (assam)  மாநிலத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் ஏற்கனவே ராகுல் நடைபயணத்திற்கு தடைகள் ஏற்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டிருந்தது.

Assam: Batadrava Than to undergo facelift, to be transformed into one like Golden Temple

படத்ராவா சத்ரா கோவில்

அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். வருகிற 25-ந்தேதி வரை அவர் அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசாம் துறவியும், அறிஞருமான ஸ்ரீமந்த சங்கர்தேவா பிறந்த இடத்தில் அமைந்துள்ள படத்ராவா சத்ரா கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்தி இன்று காலை சென்றார்.

கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: நான் என்ன குற்றம் செய்தேன்? என ராகுல் காந்தி கேள்வி | Rahul Gandhi Denied Entry In Temple Asks What Crime Have I Committed?

அப்போது கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தனக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், “நாங்கள் கோவிலில் தரிசனம் செய்ய சென்றோம். என்னால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. நான் என்ன குற்றம் செய்தேன்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Batadrava Than in Assam asks Rahul Gandhi to not visit the shrine during Pran Pratishtha ceremony

மேலும், “நாங்கள் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்த விரும்பவில்லை. எளிமையான முறையில் பிரார்த்தனை செய்ய விரும்பினோம்” என்றார். அதனைத் தொடர்ந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்.. “அப்படி என்ன குற்றம் செய்தேன்?” ராகுல் தர்ணா! | Rahul Gandhi stopped from visiting Assam shrine, stages dharna - Tamil ...

ராகுல் காந்தி இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார் என்ற செய்தி வெளியானதும், அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா சர்மா “ராகுல் காந்தி இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு பக்கம் ராமர் கோவில் கும்பாபிஷேக நேரலை, மறுபக்கம் ராகுல் காந்தி ஸ்ரீமந்த சங்கர்தேவா பிறந்த இடத்தில் சாமி தரிசனம் என்பது மோதலை ஏற்படுத்தும். இது அசாமிற்கு நல்லதல்ல” எனக் கூறியிருந்தார்.

Gandhis"களைவிட யாரும் அதிக ஊழல் செய்ய முடியுமா?- அசாம் முதல்வர் பதில் தாக்கு | Can Anyone Be More Corrupt Than Gandhis Himanta Biswa Sarma

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா சர்மா

கோவில் நிர்வாகம் மதியம் 2 மணிக்கு முன்னதாக சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என கேட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணத்திற்கு தடைகள் ஏற்படுத்துவதாக, அம்மாநில முதல்வர் மீது காங்கிரஸ் விமர்சனம் செய்தது. இது தொடர்பாக போராட்டம் நடத்துவதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் என்பதை இந்த நாடு எப்போது உணருகிறதோ அப்போது தான் சாமி தரிசனம் அனைவருக்கும் எளிதாக கிடைக்கும்.

Assam: Rahul Gandhi stages dramatic sit-in protest for being denied entry to Batadrava Than temple after he turned down request to visit later

ராஜஸ்தான் மாநிலம் ஜாலவர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து தலித் அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோயில் சடங்குகளுக்கு தலித்துகளின் பணம் ஏற்கப்படாது தலித் மக்களின் நன்கொடையில் அளிக்கும் பிரசாதம் தூய்மையற்றதாகக் கருதப்படும் எனக்கூறி ராமர் கோயிலுக்கு நன்கொடையாக பெறப்பட்ட நிதியை அந்த மக்களிடம் திருப்பி அளிக்கப்பட்டது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் தீண்டாமை என்பது இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை காட்டுகிறது இந்த நிதி திருப்பியை அளிக்கப்பட்ட விவகாரம்.

இதையும் படிங்க.!