chennireporters.com

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை உறவினர்களிடம் பேசவைத்த ஏழு போலீசார் சஸ்பெண்டு..!!

சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா

பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட ஏழு போலீசாரை சஸ்பெண்ட் செய்து சேலம் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை கோவை மகளீர் நீதிமன்றத்தில் இருந்து சேலம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களை உறவினர்களிடம் பாதுகாப்பு போலீசார் பேச அனுமதி அளித்துள்ளனர்.

இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த ஏழு பேரை சேலம் சிட்டி போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி பாலியல் குற்றவாளிகள் உறவினர்களுடன் பேச போலீசார் பணம் வாங்கிக்கொண்டு அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

குற்றம்சாட்டப்பட்ட குமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் ஆகிய நான்கு பேரை சேலம் மத்திய சிறையில் இருந்து கோவை மகளீர் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த சேலம் ஆயுதப்படைஎஸ். எஸ்.ஐ. சுப்பிரமணியம் காவலர்கள் பிரபு, வேல்குமார், கார்த்திக், ராஜேஷ்குமார், நடராஜன், ராஜ்குமார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு சேலம் சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் கோவை ஏர்போர்ட் அருகில் போலீஸ் வேன் நிறுத்தப்பட்டது.

அந்த இடத்தில் மேற்படி நபர்களின் உறவினர்கள் அங்கு காத்துக்கொண்டிருந்தனர்.

உறவினர்கள் மேற்படி நபர்களிடம் பேச ஆயுதப்படை போலீசார் அனுமதி அளித்தனர்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வலம் வந்தது.அது சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் கோடா விசாரணை நடத்தினார்.காவல்துறையை சேர்ந்த 7 பேரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.இந்த செய்தி சேலம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க.!