chennireporters.com

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் திடீர் ராஜினாமா உட்கட்சி பூசல் காரணம்?

பிரத்தியேகமான சிறப்பு செய்தி:

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ராஜினாமா செய்யப்பட்டுள்ளது நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரத்திற்கு கீழ் பத்துக்கும் மேற்பட்ட கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் மிகவும் இளையவரான ஜெ. ரவீந்திரன் என்பவருக்கு அரசு தனியாக ஒரு உத்தரவை வெளியிட்டது. அதில் அரசு அனைத்து துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் இவரிடம் கலந்து ஆலோசிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் உயர் அதிகாரிகள் அட்வகேட் ஜென்ரலை பார்காமல் அவருடைய கவனத்திற்கு எந்த தகவலையும் சொல்லாமல் சென்றாக கூறப்படுகிறது.ரவிந்திரன் மாறன் பிரதர்ஸ் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இவருடைய வீடும் கோபாலபுரத்திலேயே இருக்கிறது என்கிறார்கள்.  அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரத்திற்கும் ரவீந்திரனுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்ததாகவும் கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும்  பனிப்போர் நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ஒருமுறை அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் தனது ராஜினாமா கடிதத்தை எடுத்துக் கொண்டு முதலமைச்சர் சந்தித்து நடந்தவற்றை எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.ஆனால் முதலமைச்சர் தாங்கள் அரசுக்கு உறுதுணையாக நீங்கள் இருக்க வேண்டும் இனிமேல் எந்த பிரச்சனையும் வராது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவரை சமாதானப்படுத்தி மீண்டும் பணி செய்யுங்கள் என்று ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அரசுக்கு இணக்கமாக பணியாற்றி வந்த  சண்முகசுந்தரத்துடன் ரவீந்திரனுக்கு மோதல் போக்கு ஏற்பட்டதாகவும் அது தவிர ஒருமுறை சபரீனுக்கும் சண்முகசுந்தரத்துக்கும் ஒரு மோதல் ஏற்பட்டதாகவும் அப்போது அவர் இவரை  மரியாதை குறைவாக நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சண்முகசுந்தரம் தனது அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்கிறார்கள் திமுக வழக்கறிஞர்கள்.

அவர் அளித்துள்ள கடிதத்தில் என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக நான் எனது பதவி ராஜினமாக செய்கிறேன். நான் தொடர்ந்து வழக்கறிஞராக பணியாற்ற இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இது குறித்து நாம் வழக்கறிஞர்கள் மத்தியில் விசாரித்த போது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது.மேலும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரின் போக்கு சரி இல்லை என்பதால் தமிழக அரசின் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் ஆர். அனிதா சஜீவ் குமார் ஆகிய இருவரும் ராஜினாமா செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அரசு வழக்கறிஞர்கள் துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லுகிறார்கள் தமிழக அரசு வழக்கறிஞர்கள். பல திமுக விஐபிகளின் வாரிசுகள், உறவினர்கள், தனக்கு வேண்டப்பட்டவர்கள் என அனுபவம் இல்லாத பல பேர் அரசு வழக்கறிஞர்களாக பதவி வகித்து வருகின்றனர் என்கிறார்கள் உடன் பிறப்புக்கள். 

லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்பான பல வழக்குகளில் சண்முக சுந்தரம் அவர்களின் வாதம் சரியாக எடுப்படவில்லை என கருதப்படுகிறது. மேலும் அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளை தாமாக முன் வந்து விசாரணைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்தால், இந்த ராஜினாமா நடவடிக்கை நடத்திருப்பதாக தகவல்.சண்முகசுந்தரம் கடந்த 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராகவும் பணியாற்றி இருக்கிறார் திமுக ஆட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கிற போதெல்லாம் சண்முகசுந்தரம் முக்கிய பொறுப்புகளில் முக்கிய பொறுப்பு வகிப்பார் இவர் ஏற்கனவே மாநிலங்கள் அவை உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார் தற்போது 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பதவிக்கு வந்ததும் ஆர் சண்முகசுந்தரம் அரசு தலைமை வழக்கறிஞராக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நியமித்தார்.
தமிழக அரசின் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதையும் படிங்க.!