பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் புதிதாக மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட கொண்ட நாராயண் ரானே மும்பையில் கடந்த சில நாட்களாக “ஜன் ஆசீர்வாத யாத்திரை” என்ற பெயரில் பேரணி நடத்தி வந்தார்.
மும்பையில் இருந்து சிந்துதுர்க் பகுதி வரை மிக நீண்ட பேரணியை இவர் மேற்கொண்டு வந்தார் பல்வேறு இடங்களில் பொது கூட்டங்களை நடத்தி மக்கள் மத்தியில் இவர் பேசினார்.
முக்கியமாக மும்பையில் பல்வேறு இடங்களில் சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தார் இதனால் நாராயண் ரானே யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் பாஜக சிவசேனா உறுப்பினர்கள் இடையே சிறு சிறு மோதல் ஏற்பட்டது.
மோதல் இந்த யாத்திரையில் பேசிய நாராயண் ரானே, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கன்னத்திலேயே அறைந்திருப்பேன் என்று கூறியது பெரிய சர்ச்சையானது.
இந்தியா சுதந்திரம் அடைந்த தினம் கூட உத்தவ் தாக்கரேவிற்கு தெரியவில்லை.
இந்தியா சுதந்திரம் அடைந்து எத்தனை வருடங்கள் ஆகியுள்ளது என்று கூட அவருக்கு தெரியாமல் உதவியாளரிடம் கேட்கிறார்.
அவரின் இந்த செயலை ஏற்க முடியாது அவர் இப்படி பேசும் போது நான் அருகில் இருந்திருந்தால் அவரின் கன்னத்திலேயே அறைந்திருப்பேன் என்று நாராயண் ரானே குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் நாசிக்கில் உள்ள ரத்தின கிரி போலீசார் அமைச்சர் ரானேவை இன்று மதியம் அதிரடியாக கைது செய்தனர். இதனால் மும்பையில் பல இடங்களில் பெரும் கலவரங்கள் நடைபெற்று வருகிறது.
மத்திய அமைச்சர் ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் ஜனாதிபதியின் அனுமதி பெற வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
இந்நிலையில் ரானே கைது செய்யப்பட்டு இருப்பது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.