chennireporters.com

பழங்குடி மாணவர்கள் அளித்த நிவாரண நிதி. நெகிழ்ச்சியடைந்த முதலமைச்சர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கும்மினிப்பேட்டை பகுதியில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

இங்குள்ள மாணவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர் சுகந்தி வினோதினி மாலையில் சிறப்பு வகுப்பு எடுப்பது மட்டுமல்லாமல் திருக்குறள் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சிறு தொகையை பரிசாக வழங்கி கல்வியில் ஆர்வத்தை தூண்டி வருகிறார்.

இந்நிலையில் சுகந்தி கொடுத்த பணத்தை மாணவர்கள் உண்டியலில் சேர்த்து வைத்து வந்தனர்.தற்போது சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் சேமித்து வைத்திருந்த ரூபாய் 847 பணத்தை வெள்ள நிவாரணத்திற்காக சுகந்தி வினோதினி மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மழைக் காலங்களில் வீடில்லாமல் வறுமையில் வாழ்ந்து வந்தாலும் பிறரது துன்பங்களைப் பார்த்து இந்த பழங்குடி மாணவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பழங்குடி இன மாணவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இதைப் பார்க்கிற அரசு அதிகாரிகள் வீடில்லாமல் குடிசையில் வாழும் இந்த மக்களுக்குஉடனடியாக வீடு கட்டித்தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க.!