chennireporters.com

அலறிய ஆர்டிஓ ஆபீஸ் அதிகாரிகள் சாட்டையை சுழற்றி லஞ்ச ஒழிப்புத்துறை ஏடி.எஸ்.பி.

லஞ்சம் வாங்குவதை நிறுத்துங்கள் இல்லையென்றால் ஊரை விட்டு வெளியேறுங்கள் என்று பேசி அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் குறித்து சமூக வலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது. 

கடலூர் மாவட்டத்தில் கடந்த 31ஆம் தேதி கடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் சோதனை செய்து ஆர்டிஓ சுதாகரை கைது செய்தது.

அந்த இடத்துக்கு பொறுப்பு ஆர்டிஓவாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆர்டிஓ முக்கண்ணன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஜூன் ஒன்பதாம் தேதி மாலையில் 4 மணியளவில் கடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் பண்ருட்டி நெய்வேலி யூனிட் அலுவலக பிரேக் இன்ஸ்பெக்டர்கள் விஜய், சோமசுந்தரம், பிரான்சிஸ் மற்றும் அலுவலக அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் இரண்டு சக்கர மற்றும் கார் லாரி பஸ் ஓட்டுநர்கள் மற்றும் டீலர்கள் அது தவிர ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளின் உரிமையாளர்கள் ஆர்டிஓ அலுவலக புரோக்கர்கள் அனைவரையும் அழைத்து ஒரு கூட்டத்தை கூட்டினார் ஆர்டிஓ முக்கண்ணன்.

இந்த கூட்டத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமை தாங்கினார். அந்த கூட்டத்திற்கு லஞ்ச ஒழிப்பு துறையை சேர்ந்த அதிகாரிகளும் வந்திருந்தனர். இந்த கூட்டத்தில் ஏடிஎஸ்பி தேவநாதன்  பேச ஆரம்பித்தார் ஆரம்பத்தில் இருந்தே அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக கடிந்து கொண்டு பேசிய ஏடிஎஸ்பி லஞ்சம் என்ற பெயரில் இப்படி பிச்சை எடுக்காதீர்கள்.

இதற்கு கோயிலிலும் பேருந்து நிலையங்களிலும் நின்று நீங்கள் பிச்சை எடுக்கலாம் அது எவ்வளவோ மேலான காரியம் என்று தெரிவித்தார்.

இதற்கு மேலும் உங்களோடு நான் பேசினால் கோபமாகத்தான் பேசும் சூழ்நிலை உருவாகும் என்று பேசி மேலும் பேச்சை தொடர்ந்தார். இந்த அலுவலகத்தில் சிலர் பேப்பர் கொடுத்தால் உடனே பைல் மூவ் ஆகிறது .சிலர் கொடுக்காமல் போனால் அப்படியே பேப்பர் நின்று விடுகிறது. யார்,யார் கோப்புகளை தயார் செய்து அனுப்பினார்கள் என்று நான் சொல்லட்டுமா என்று அவர் கூட்டத்தில் கேட்டதும் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் முகம் சிவந்தது. இந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளரான புருஷோத்தமன் போன்றவர்கள் ஃபையில் மட்டும் கிளியர் ஆகி இருக்கிறது.என்று ஒரு லிஸ்ட்  பட்டியலிட்டார்.  அவர் ஒவ்வொரு விஷயத்தையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று சொன்னார்.

ஆர்டிஓ சொல்வது போல சோரூமில் கூடுதலாக பணம் வாங்கக்கூடாது. உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று வெளிப்படையாக பேசுங்கள் என் நோக்கம் இந்த அலுவலகத்தில் நீங்கள் லஞ்சம் வாங்க கூடாது என்பதுதான் எனக்கு  என்று பேசினார்.

மேலும் அவர் ஆர்டிஓ 12 மணிக்கு தான் ஆபிஸ் வருகிறார்.  ஆனால் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் பாண்டியன் ஆர்டிஓ அறையில் சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது என்று கேள்வியை எழுப்பினார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் ஆர்டிஓ முக்கண்ணன் எழுந்து இந்த அலுவலகத்தில் நான் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று ஏ டி எஸ் பி தேவன் தேவநாதனிடம் சொல்ல உடனே அவர் ஆர்டிஓ லஞ்சமாக மாட்டேன் என்று சொல்கிறார் . அப்படி என்றால் யாருக்காக லஞ்சம் வாங்குறீங்க யாருக்கு காசு கொடுப்பீங்க ஏன் பத்து நாள் பணம் ஸ்டாக் வச்சிருக்கீங்க யாருக்கு கொடுக்க வச்சிருக்கீங்க என ஆவேசமாக பல கேள்விகளால் அதிகாரிகளை துளைத்தெடுத்தார்.

ஏ டி எஸ் பி தேவநாதனின் இந்த பேச்சும் நடவடிக்கையும் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் ஆர்டிஓ ஆபீஸ் புரோக்கர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஆர்டிஓ அலுவலக வட்டாரத்தில் நாம் விசாரித்த போது ஏ டி எஸ் பி தேவநாதன் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவருடைய முயற்சி சிறப்பானதாக இருக்கிறது மக்களுக்காக அவர் பணியாற்ற நினைக்கிறார்.

அதே நேரத்தில் அவர் கொஞ்சம் திரை மறைவில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் சில பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் அதிமுக ஆட்சியில் மாதம் 40 லட்சம் கொடுத்து ஆர்டிஓ பணிக்கு வந்தோம் . திமுக ஆட்சி வந்த பிறகு  ரூபாய் 3 கோடி கொடுத்து வருகிறோம்.  மாதம் மாமூலாக ரூபாய் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரையில் கொடுத்து வருகிறோம்.

ஆட்சியாளர்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தும் வரையில் அதிகாரிகள் வாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள் என்று சொன்னார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது போலீஸ அதிகாரிகள் முதல்வரிடம் சொல்லட்டும் ஆர்டிஓ ஆபீஸ்களில் மாதம் மாமுல் வாங்க வேண்டாம் என்று உத்தரவு போட சொல்லுங்கள் என்கிறார்கள் சில புரோக்கர்கள்.

தற்போது இங்கே நடந்த கூட்டத்தை போல காவல் நிலையங்களிலும் எஸ் பி ஆபிசுக்களிலும் தாலுகா ஆபீஸ்களிலும் வீடியோ ஆபீஸ்களிலும் நடத்த சொல்லுங்கள் நாங்கள் அதை வரவேற்கிறோம் என்கின்றனர் லஞ்சம் இல்லாத துறை தமிழ்நாட்டில் ஏதாவது இருக்கிறதா என்று மறு கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த கூட்டத்தில் ஏடிஎஸ்பி பக்கத்தில் அமர்ந்திருந்த முக்கண்ணன் அதிகளவு லஞ்சம் வாங்கி இருக்கிறார் அது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது தற்போது கடலூர் ஆர்டிஓ அலுவலகம் பண்ருட்டி நெய்வேலி ஆகிய அலுவலகங்களில் எந்த வேலையும் நடப்பதில்லை.

வாகன உரிமம் எடுப்பதற்கான டெஸ்ட் குறைந்து இருக்கிறது லைசன்ஸ் எடுக்க எட்டு போடும்போது பலரும் பைல் ஆகிறார்கள் ஹெல்மெட் டெஸ்ட் வாகனத்தில் இரண்டு பிரேக் இருக்கும் இடது பக்கம் இன்ஸ்பெக்டர் உட்கார்ந்து கொண்டு பிரேக்கில் கால் வைத்துக்கொண்டு வண்டியை எடு என்பார் வாகனத்தை எடுப்பவர் ஆக்சிலேட்டர் கொடுத்தால் கார் ரேஸ் ஆகும் நகராது உடனே ஃபெயில் போட்டு விடுவார்.

அதுபோல லாரி பேருந்து பேப்பர்கள் எல்லாம் பெண்டிங்கில் இருக்கிறது காரணம் நிரந்தரமான ஆர்டிஓ இல்லை. கிரேடு இரண்டு இன்ஸ்பெக்டர்கள் இரண்டு பேர் இல்லை கிரேட் 1 இன்ஸ்பெக்டர்கள் இரண்டு பேர் இல்லை ஆர்டிஓ பியே இல்லை, ஆர்டிஓ ஆபீசில் ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. நிர்வாக பணிகளை பார்ப்பதற்கு குறைவான ஆட்கள் இருக்கிறார்கள் என பல்வேறு குறைகளை சுட்டி காட்டினார்கள்.

விஜிலென்ஸ் அலுவலகத்தில் விசாரித்த போது தேவநாதன் அதிகாரி மிகவும் நேர்மையானவர் அவர் இருக்கும் இடத்தில் யாரும் லஞ்சம் வாங்க கூடாது என்று நினைப்பவர் காவல்துறையினரையும் விட்டு வைக்க மாட்டார். அந்த அளவுக்கு நேர்மையானவர் என்கிறார்கள் ஏடிஎஸ்பி தேவநாதனின் இந்த நடவடிக்கை அதிகாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. என்றால் மாற்றுக் கருத்து இல்லை விரைவில் கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பெரிய மீன்கள் சிக்கும் என்கிறார்கள் சில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.

இதையும் படிங்க.!