திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் ஒன்றிய துணை பெரும் தலைவர் பர்கத்துல்லாகான். தனது வாழ்த்தை மடலாக்கி இளைஞர்களின் நாயகனுக்கு மகுடம் சூட்டி இருக்கிறார்.
நவம்பர்-27- ன் நாயகன்.
வருங்கால வரலாறே; இளைஞர்களின் எதிர்காலமே!!
கழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமே, நாளை நாடாளப் போகும். எங்கள் உதயசூரியனே..!!
இந்த மண்ணையும், மக்களையும் நேசிக்கும் இளைஞனே, எதிர்கால தமிழகத்தின் உதயசூரியனே,!!
உழைப்பால் உயர்ந்த இளையவனே, எங்கள் இதயத்து நாயகனே.!! வானில் வந்து உதித்த சூரியனே வாழ்வாங்கு வாழ்க நீ.. வாழ்க நீ..!! வாழ்க நீ..!! நட்புக்கு மகுடம் சூடி அமைச்சர் ஆக்கி அழகு பார்க்கும் உள்ளம் கொண்ட அன்பகத்து நாயகனே..!!
எங்கள் அன்னை அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த கலைஞரின் பெயரனே.!! தயாளு அம்மாவின் முதல்வனின் புதல்வனே.!! இளைஞர்களின் போர்படை மாமன்னனே..!!
தலைப்பற்றி கவலைப்படாமல், தலைக்கணமும் இல்லாமல்..தரணி போற்றும் சிறப்பு செயலாக்க திட்டத்தின் செந்தமிழே.!!
உன் அப்பாவின் அன்பு இருக்கும் வரை..உன்னை ஆண்டவனாலும் அசைக்க முடியாது..!! வாழ்க !! நீ பல்லாண்டு, பல்லாண்டு..!!
நவம்பரில் உதித்த நாயகனே;!! நாளை நாடாள போகும் எங்கள் உதயனே, அரியணை காத்திருக்கிறது வா, வா, வந்து அமறு.. வாகை சூடு..!! நாளைய தமிழகமே இளைஞர்களின் காவலனே.!! வாழ்க. நீ, பல்லாண்டு, பல்லாண்டு..!!!
இவன். பர்கத்துல்லாகான்.எம்.எஸ்.சி. ஐ.டி. திருவள்ளூர் ஒன்றிய குழு துனை தலைவர்.