chennireporters.com

திருப்பூர் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

திருப்பூர் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை மூட நடவடிக்கை எடுக்கும்படி திருப்பூர் மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வக்கீல் கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், ‘ திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 368 இறைச்சி கடைகளில் 26 கடைகள் எந்தவித அனுமதியுமின்றி, ஊரடங்கு காலத்திலும் இயங்கி வருகிறது. அந்த கடைகளை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட பெஞ்ச், மனுவில் குறிப்பிட்டுள்ள 26 கடைகள் மட்டுமல்லாமல், மாநகராட்சியில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து இறைச்சி கடைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. மேலும், இம்மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், திருப்பூர் மாநகராட்சிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வார காலத்திற்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க.!