chennireporters.com

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்த வேண்டும் குடிமகன்கள் கோரிக்கை.

அரசு அலுவலகங்கள் டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.

தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

இதில் கட்டுக்கட்டாக பணமும் பரிசுப்பொருட்களும் கணக்கில் வராத பணமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி டாஸ்மாக் கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 93 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆகிய பகுதிகளில் உள்ள வெளிநாட்டு மதுபானங்களை விற்கும் எலைட் மதுக்கடைகளில் கூடுதலாக ஒரு புல் பாட்டிலுக்கு 20 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரைக்கும் விற்கிறார்கள்.

அதே போல் அனைத்து விதமான பீர் பாட்டில் வகைகளுக்கும் ஒரு பாட்டில் ஒன்றுக்கு இருபது ரூபாயிலிருந்து முப்பது ரூபாய் வரை கூடுதலாக விற்கிறார்கள்.

இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் பொது மேலாளர்,தமிழக டாஸ்மாக் இயக்குனர் ஆகியோருக்கு பல புகார்கள் அனுப்பியுள்ளனர்.

எனவே இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்த வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!