chennireporters.com

வாக்கு பதிவு எந்திரம் ஒரு மோசடி பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி..

வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு மோசடி என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி டெல்லியில் இன்று பேட்டி அளித்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. “வாக்குப்பதிவு எந்திரத்தின் மூளையாக இருப்பது மைக்ரோ கன்ட்ரோலர் சிப் (Micro Controller Chip).

இந்த சிப்பை தயாரிப்பது ஒரு ஜப்பான் நிறுவனம். இந்த எந்திரங்களை ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரானிக் கார்ப்பரேசன் ஆப் இந்தியா வாங்கி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கொடுக்கிறது.

இந்த ஜப்பான் நிறுவனத்தை அணுகி..  ‘நீங்கள் ஜப்பானில் தேர்தலுக்கு இதே சிப்பை பயன்படுத்துகிறீர்களா ?’ என கேட்டேன்.

நன்றி இந்தியா ஒயர் .

அதற்கு ‘நீங்கள் என்ன முட்டாளா ? நாங்கள் வாக்கு எந்திரங்களை எக்காலத்திலும் தொட மாட்டோம். வாக்குச் சீட்டில் தான் தேர்தல் நடத்துகிறோம்’ என்றனர்.

ஜப்பானைப் போல இங்கிலாந்திலும் வாக்கு சீட்டு முறையை தான் பின்பற்றுகின்றனர் அதே போல ஜெர்மனியிலும் வாக்கு எந்திரத்துக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.”

உலகத்தில் பல்வேறு நாடுகளில் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவிலும் தடை விதிக்க வேண்டும் இந்தியாவும் வரும் காலங்களில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி அளித்துள்ளார்.இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதே போல தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மதுரை சேர்ந்த இளம் வழக்கறிஞர் நந்தினி இன்னும் பிற அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் இளம் தலைமுறையினர் அனைவரும் வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வரும் காலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

இதையும் படிங்க.!