தமிழகத்தில் வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த மோசடி பேர்வழி புதுக்கோட்டை சேர்ந்த 420 நித்யானந்தம் என்பவர் மீது நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். பொது மக்களிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றி பணமும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாகவும் அவர் மீது பல பேர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் நாம் செய்தியில் குறிப்பிட்டு இருந்தோம்.
அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல பேர் நம்மை தொடர்பு கொண்டு எனக்கு வேலை வாங்கித் தருவதாக 15 லட்சம் ,10 லட்சம் பெற்றுக் கொண்டார் என்று தொடர்ந்து நம்மை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த நித்தியானந்தம் என்பவரை நாம் தொடர்பு கொண்டோம் அதற்கு அவர் எந்தவித பதிலையும் சொல்லாமல் நமது கேள்விக்கும் பதில் அளிக்காமல் நம்மை தவிர்த்தார். தாங்கள் மோசடி செய்திருப்பதாக பல்வேறு புகார்கள் வருகிறது. அந்த புகார்கள் குறித்து உங்கள் தரப்பு விளக்கத்தை அறிய விரும்புகிறோம் என்று நாம் அவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி இருந்தோம். அந்த தகவலுக்கும் அவரிடத்தில் இருந்து இது வரை எந்த பதிலும் வரவில்லை.இந்த நிலையில் டெல்லியில் உள்ள இந்திய உணவுக் கழகத்தில் மெம்பர் செகரட்டியாக இருப்பதாக விசிட்டிங் கார்டும் தனது காரில் அரசு முத்திரை பொருத்தப்பட்ட பாரையும் படம் பிடித்து இனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து நாம் ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர் சொல்லி கோட்டையில் ஆட்டம் போடும் போலி ஐஏஎஸ் நித்தியானந்தம் என்று செய்தி வெளியிட்டு இருந்தோம். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர் சொல்லி 20 கோடி மோசடி செய்த நித்தியானந்தம் என்கிற தலைப்பில் மற்றொரு செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்தி வெளியான பிறகு தமிழகம் முழுவதும் பல புகார்களை நம்மிடம் கூறினார்கள். அதில் டெல்லி மற்றும் தமிழகத்தில் உள்ள பல ஐஏஎஸ் அதிகாரிகள் தனக்கு நெருக்கமானவர்கள் என்றும் அவர்களிடம் சொல்லி உங்களுக்கு அரசு துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி தான் பணம் பெற்றுள்ளார் என்று சொல்லுகின்றனர் இவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.அது தவிர இவர் தமிழக அரசு சுகாதார துறையில் மருத்துவமனைகளுக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கி வருவதாக சொல்லுகிறார்கள். இதனால் பல கம்பெனிகளை போலியாக உருவாக்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது TILO Dhasya pharmacy private limited, a k l enterprises and I bell consultant private limited, kason group of companies என்ற பெயரில் கம்பெனி நடத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். இது தொடர்பாக புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேற்கண்ட கம்பெனிகள் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்று கேட்டுள்ளனர். அதற்கு தாங்கள் கேட்ட கம்பெனிகள் பெயரில் எந்த பதிவும் இந்த அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று பதில் அளித்து இருக்கின்றனர்.இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஒரு ஐஏஎஸ் அதிகாரி இவருக்கு உதவி செய்ததாக கூற கூறுகிறார்கள் அதேபோல பண மதிப்பு மதிப்பிழப்பு காலத்தில் 2016 ஆம் ஆண்டு இரண்டரை கோடி ரூபாய் இவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு வருவாய் துறை அலுவலகத்தில் நிலுவையில் இருக்கிறது. நித்தியானந்தம் தமிழ்நாட்டில் உள்ள சில ஐஏஎஸ் அதிகாரிகள் பெயரில் பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.இந்த பிராடு பேர்வழி மீது போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. புதுக்கோட்டையில் உள்ள இவரது வீட்டில் மத்திய அரசு பெயரில் வைக்கப்பட்டிருந்த போர்டு நீக்கப்பட்டுள்ளது. அதேபோல இவரது காரில் இருந்த மத்திய அரசு முத்திரை மற்றும் பெயர்பலைகளும் நீக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தம் தமிழக அரசில் உள்ள சில அமைச்சர்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பெயர் சொல்லி அதிகாரிகளை மிரட்டி வருவதாக புலம்புகிறார்கள். தலைமைச் செயலக அலுவலர்கள். உடனடியாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் புதுக்கோட்டை 420 நித்யானந்தம் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்கின்றனர். உடன்பிறப்புகள். நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.