chennireporters.com

பாண்டிச்சேரியில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை.

பாண்டிச்சேரி மங்களம் தொகுதி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமரன் வில்லியனூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கனுவாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர். பாஜகவில் மாவட்ட பொறுப்பாளாராக பணியாற்றி வந்தார்.  இவரை இன்று இரவு பத்து மணியளவில் மர்ம நபர்கள சிலர் அவரை வழி மடக்கி வெடிக்குண்டு வீசி வெட்டி படு கொலை செய்து விட்டு தப்பியோடினார்கள்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்ளனர். சென்னையை விட பாண்டிச்சேரியில் நாளுக்கு நாள் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!